ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களை ஒப்பிடுகையில் மெதுவாக நகரும் கிரகம் சனி பகவான். ஜோதிட சாஸ்திரத்தின்படி மற்ற கிரகங்களை ஒப்பிடுகையில் மெதுவாக நகரும் கிரகம் சனி பகவான்.
இப்போது 2022-ல் இரண்டு முறை ராசியை மாற்றப்போகிறார். ஏப்ரல் 29-ம் தேதி அவர் ராசி மாற்றம் செய்து மகர ராசியை விட்டு கும்ப ராசியில் பிரவேசிப்பார்.
ஜூன் 5 முதல் பின்னோக்கி நகர்ந்து மீண்டும் மகர ராசியிலேயே இருப்பார்.
அந்த வகையில், 2022 ஆம் ஆண்டில் இரண்டு முறை ஏற்படவுள்ள சனியின் ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
ஐபிஎல் இந்த ஆண்டில் ஸ்ட்ரைக் ரொட்டேஷன் புதிய விதி அமல்! பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலா?
மேஷம்
மேஷம் ராசியினர்களுக்கு சனியின் மாற்றங்கள் மிகவும் சுபமானதாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மரியாதை கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். பணியிடத்தில் உறவுகள் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியினர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இந்த காலத்தில் உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும்.
நினைத்த வேலையை பெறுவீர்கள். மேலதிகாரியுடன் நல்லுறவு உருவாகும். அதிக பாராட்டுகளும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியினர்களுக்கு இந்த நேரம் பண வரவுக்கு சாதகமான நேரமாகும். நிதி நிலை செழிப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்திருந்த வெளியூர் பயணம் நடக்கும்.
இந்த பயணத்தால் லாபம் காண்பீர்கள். தனுசு ராசிக்காரகளுக்கு, குறிப்பாக வணிகர்களுக்கு, இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மகரம்
மகர ராசியினர்களுக்கு தொழில்-வியாபாரத்திற்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய வேலை கிடைக்கலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை வந்து சேரும்.
தொழிலதிபர்களுக்கு இந்த நேரம் அதிக லாபம் தரும். பெரிய ஒப்பந்தங்களை நீங்கள் எளிதாக பெற்று அதில் அதிக லாபம் காண்பீர்கள்.