ஆட்டிப்படைக்கும் ராகு… அள்ளி கொடுக்க போகும் கேது? ஆபத்திலிருந்து தப்பிக்க அருமையான பரிகாரம்

2022 ஏப்ரல் 12 ம் தேதி மதியம் 1.38 மணியளவில் ராகு – கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

மகரம் ராசிக்கு ராகு 4ம் இடத்திலும், கேது 10ம் இடத்திலும் வருகின்றனர்.

ராகு கேது தரும் நன்மை

உங்களின் எண்ணங்கள், செயல்பாடுகளில் புதுமையும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.

எச்சரிக்கை
தொழில், உத்தியோகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படுவதும், முடிவெடுப்பதன் மூலம் மேன்மை உண்டாகும்.

உள்ளூரில் பணியாற்றுபவர்களை விட வெளியூரில் பணிசெய்பவர்களுக்கு அபாக்கியம் குறைவாக இருக்கும்.

வாழ்க்கைத் துணையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். புதுவித ஆசை, ஆர்வங்கள் உண்டாகும்.

பயணங்களில் கவனம் தேவை. வண்டி வாகனம், சுக போகங்கள் ஏற்படும். என்றாலும் உங்கள் தாயாருக்கு ஆரோக்கிய பிரச்சினைகளும், அதன் மூலம் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நிதி நிலை
உங்களுக்கு வரவேண்டிய தன வரவில் இருந்த இழுபறிகள் நீங்கி, பணம் வந்து சேரும்.

எதிர்பாராத விதத்தில் அதிர்ஷ்டம், பண வசதி கிடைக்கும்.

பூர்விக சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் சாதகமான நிலை உண்டாகும்.

ஆபத்தில் இருந்து தப்பிக்க பரிகாரம்
குல தெய்வ வழிபாடு செய்யவும். வெள்ளிக்கிழமை தோறும் லட்சுமி நரசிம்மர் வழிபடு செய்து வர, தொழிலில் இருந்த தடைகள் நீங்கும்.