இன்று காலை 6.41 மணிக்கு கிழக்கு திசையில் உதயமாகியுள்ளார் குரு பகவான். பிப்ரவரி 23 அன்று வியாழன் மேற்கு திசையில் அஸ்தமானார்.
தற்போதைய உதயத்தால் அனைத்து ராசிக்காரர்களும் சுப பலன்களை பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
மேஷம்: வருமானமும், மகிழ்ச்சியும், மரியாதையும் அதிகரிக்கும். செலவுகள் குறையும், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் வரத் தொடங்கும்.
ரிஷபம்: வாழ்வாதாரம் வலுவாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் முழு ஆதரவும் கிடைக்கும். எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும்.
மிதுனம்: அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். தடைபட்ட பணிகள் வேகம் பெறும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். மரியாதை அதிகரிக்கும்.
கடகம்: எட்டாம் வீட்டில் வியாழன் சஞ்சரிப்பது பிரச்சனைகளில் இருந்து காக்கும். அதிக விவேகத்துடன், நீங்கள் சரியான முடிவுகளை எடுக்க முடியும்.
சிம்மம்: உங்கள் வாழ்க்கை துணையுடன் நல்லுறவு இருக்கும். குடும்பத்தில் அன்பு வளரும். சொத்துக்கள் வாங்கும் சூழல் உருவாகும்.
கன்னி: நோய்கள், எதிரிகள் தொல்லை குறையும். நிதி நெருக்கடி நீங்கும். மகிழ்ச்சியையும் மரியாதையையும் பெறுவீர்கள். தைரியம் அதிகரிக்கும்.
துலாம்: கல்வித்துறையில் சாதனைகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நெருக்கடி நீங்கும். நண்பர்களுடன் அன்பு அதிகரிக்கும். பணம் வரும் .
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நிதி நெருக்கடி நீங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
தனுசு: இந்த காலத்தில் அதிக வாய்ப்புகளை பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். தைரியம் அதிகரிக்கும்.
மகரம்: பேச்சால் ஆதாயம் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். மரியாதை அதிகரிக்கும்.
கும்பம்: உடல் நோய்கள் விலகும். முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். பெற்றோர்களின் உதவியால் காரியம் முடிவடையும். நம்பிக்கை அதிகரிக்கும்.
மீனம்: செலவுகள் குறையும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அனைத்து இடங்களிலும் வெற்றி கிடைக்கும். நிதி நெருக்கடி இருக்காது. மீன ராசிக்கார்ரகளின் பொருளாதார நிலை மேம்படும்.