2022 ஆம் ஆண்டில் பல பெரிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன.
இதில் சனி பகவான் கர்மத்திற்கு ஏற்ற பலனை அளிக்கக்கூடியவராக கருதப்படுகிறார்.
தற்போது சனி பகவான் மகர ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி கும்ப ராசிக்கு செல்லவிருக்கிறார்.
மேஷம்
சனி பகவான் மேஷ ராசியின் கர்மா, தொழில், வேலை மற்றும் வியாபாரம் ஆகியவற்றின் வீடான 10 ஆவது வீட்டில் உதயமாகிறார்.
இதனால் இந்த ராசியைச் சேர்ந்தவர்களின் ஜாதகத்தில் ராஜயோகம் உருவாகிறது. இதன் விளைவாக ராஜ வாழ்க்கையை இந்த ராசிக்காரர்கள் வாழ்வார்கள். அரசியலில் இருப்பவர்கள் இப்பெயர்ச்சியால் பெரிய பதவியைப் பெறுவார்கள்.
ரிஷபம்
சனி பகவான் 9 ஆவது வீட்டில் உதயமாகியுள்ளதால், ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜ யோகம் உருவாகிறது.
இதனால் இக்காலத்தில் வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அதே வேளையில் இக்காலத்தில் எந்த வேலை செய்தாலும், அதில் வெற்றி பெறுவார்கள்.
தயவு செய்து பூஜை அறையில் இந்த சாமி படங்களை மட்டும் வைக்காதீர்கள்…. மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?
துலாம்
சனி பகவான் துலாம் ராசியின் 4 ஆவது வீடான இன்பம், வாகனம், தாய் ஆகியவற்றின் வீட்டின் உதயமாகியுள்ளார்.
இதனால் இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிறது. ஆகவே இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் சிறப்பாக இருக்கும் மற்றும் அது பாராட்டப்படும்.
கடகம்
கடக ராசியின் திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றின் வீடான 7 ஆவது வீட்டில் சனி உதயமாகியுள்ளார்.
இதனால் இந்த காலம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதே வேளையில் கூட்டுப் பணிகளில் வெற்றி பெறுவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மகர ராசியில் சனி உதயமாகும் பலன் கிடைக்கும். சனி பகவான் இக்காலத்தில் கும்ப ராசிக்காரர்களின் செல்வத்தைப் பெருக்குவார்.
மேலும் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலை பாராட்டப்படும்.
மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும்.
அதே நேரத்தில், இக்காலத்தில் தேவையற்ற செலவுகள் கட்டுப்படுத்தப்படும்.