இன்று அனுமன் ஜெயந்தி…உங்க ராசிப்படி இந்த ஒரு ஒரே பொருளை கொடுத்து வணங்குங்க! வரம் கிடைக்கும்

சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் தான் அனுமன் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தியானது 2022 ஏப்ரல் 16 ஆம் திகதியான இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் அனுமனை வழிபடுவதன் மூலம் சிறப்பான பலனைப் பெறலாம்.

இன்று ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவர் ராசிக்கேற்ப பொருட்களை அனுமனுக்கு படைத்தால் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

மேஷம்
அனுமனுக்கு உளுத்தால் தயாரிக்கப்பட்ட லட்டுகளை படைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

ரிஷபம்
துளசி விதைகளை அனுமனுக்கு படைத்து அர்ச்சனை செய்து வழிபடுங்கள். இதனால் அனுமனின் அருளைப் பெறலாம்.

மிதுனம்
நல்ல மணம் கொண்ட துளசி தைலத்தை அனுமனுக்கு படைத்து வணங்குவது நல்லது.

ராகு கேது பெயர்ச்சியால் பேரதிர்ஷ்டத்தை சந்திக்கும் 3 ராசிகள்! உங்க ராசி இருக்குதா?

கடகம்
நெய் சேர்த்து உளுத்து புட்டு செய்து அனுமனுக்கு படைத்து வணங்குவதன் மூலம், வாழ்வில் உள்ள தொல்லைகள் நீங்கி, அனுமனின் ஆசியைப் பெறலாம்.

சிம்மம்
சுத்தமான நெய்யால் தயாரிக்கப்பட்ட ஜிலேபியை அனுமனுக்கு படைத்து வணங்க வேண்டும்.

கன்னி
வெண்ணெயைப் படைத்து வணங்கினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

துலாம்
மோத்திச்சூர் லட்டு வாங்கி படைத்து வணங்கினால், உங்களுக்கு அனுமனின் ஆசி கிடைத்து, வாழ்வில் உள்ள இன்னல்கள் தீரும்.

விருச்சிகம்
உளுந்து லட்டுகளை அனுமன் ஜெயந்தி நாளில் படைத்து வணங்க வேண்டும். இதனால் நற்பலன்கள் கிடைக்கும்.

தனுசு
அனுமன் ஜெயந்தி நாளில் நீங்கள் அனுமனுக்கு துளசி விதைகளை மோத்திச்சூர் லட்டுகளின் மீது தூவி படைக்க வேண்டும்.

மகரம்
அனுமன் பிறந்த அனுமன் ஜெயந்தி நாளன்று மோத்திச்சூர் லட்டுகளை வழங்க வேண்டும். இதனால் வாழ்வில் நீங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கும்பம்
அனுமன் ஜெயந்தி நாளில் அனுமனுக்கு செந்தூரம் பூசுவது நல்லது. இதனால் அவர் மகிழ்ந்து பரிபூர்ண அருளை வழங்குவார்.

மீனம்
அனுமனுக்கு கிராம்புகளைக் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். இதனால் கவலைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து அனுமனின் அருளால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.