சனி கோச்சாரத்தில் ராகு கேது இணைவதால் ஏற்படும் அதிர்ஷ்டம் என்ன?

ஜோதிடத்தில் கிரஹ பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கிறது.

கிரகங்களானது, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பெயர்ச்சி ஒவ்வொரு வாழ்விலும் தொடர்புடையது. செவ்வாய் வீட்டில் அதாவது செவ்வாயின் நட்சத்திரத்தில் ராகு இருந்தாலும், ராகுவின் நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தாலும் என்ன நடக்கும்…

இந்த கிரக அமைப்பு கொண்ட ஜாதகர்கள், சிந்திக்காமல் செயல்பட்டு, அவசரகதியில் முடிவெடுத்து, பிறகு அதனால் அவதிப்படுவார்கள். ஜாதகத்தில் சூரியன் தான் ஜாதகருக்கு ஊக்கம் தரும் சக்தியாக இருப்பார்.

ஒருவரின் ஜாதகத்தில் ஷட்பலம் இழந்த சூரியன், ஆறில் புதனுடன் மறைந்தால், அந்த ஜாதகர் எந்தவொரு விஷயத்திலும் அவசர முடிவெடுத்து செயல்பட்டு, நிலைமையை சிக்கலாக்கிக் கொள்வார்.

குரு பலமிழந்து, ராகுவின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் ஜாதகர்கள், அனைத்தையும் பொதுமைப்படுத்திப் பேசுவார்கள். துதல், பெரிய அளவில் செய்கின்றவர்கள் ஜாதகத்தில் ராகு தரும் ஜாலம்.

சந்திரன் வக்ர ஸ்தானத்தில் அமர்ந்திருந்தால், சிறிய உடல்நலக் கோளாறையும் பெரிதுபடுத்தி அனைவரையும் கலவரப்படுத்தும் குணம் கொண்டவராக ஜாதகர் இருப்பார்.