ஏழரை சனியின் பார்வையில் இருந்து தப்பிக்க சனிக்கிழமை இந்த ஒரே ஒரு பொருளை கழுத்தில் அணியுங்கள்!

சனிக்கிழமையில் வரும் சனி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பொதுவாக அமாவாசை நாட்களில் மக்கள் ஏழைகளுக்கு தங்களால் முடிந்த அளவு அன்னதானம் செய்வார்கள்.

இது பாவத்தைப் போக்கி புண்ணியத்தை சேர்க்கிறது. அதிலும் சனி அமாவாசை நாளில் சனி பகவானை வழிபட்டு ஒருசில பரிகாரங்களை செய்து வந்தால், ஏழரை சனி மற்றும் பிற சனி தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்.

2022 சனி அமாவாசை எப்போது?
சித்திரை மாத அமாவாசை 2022 ஏப்ரல் 30 ஆம் தேதி வருகிறது.

இந்த அமாவாசை திதி சனிக்கிழமையில் வருகிறது. எனவே இந்த சனிக்கிழமையில் சனி பகவானை வழிபட்டால், அவரின் கோபத்தைக் குறைத்து அருளைப் பெறலாம்.

2022 இல் அஷ்டம சனியால் சிக்கி சின்னாபின்னமாகும் ஒரே ஒரு ராசி… பலன் கொடுக்கும் குரு!

சனி பகவாகவானை எப்படி வழிப்பட்டால் வரம் கிடைக்கும்?
சனி அமாவாசை தினத்தன்று காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு, மரத்தின் அடியில் ஒரு கருப்பு துணியை விரிக்க வேண்டும்.

பின் அந்த துணியில் சனி தேவரின் சிலை, யந்திரம் மற்றும் வெற்றிலையை வைத்த பின், கடுகு எண்ணெய் விளக்கை ஏற்ற வேண்டும்.

பின் நீல நிற பூக்களை சனி பகவானுக்கு அர்ப்பணிக்கவும்.

பின்னர் பூரி போன்ற எண்ணெயில் பொரித்த உணவை சனி பகவானுக்கு படைத்து வணங்க வேண்டும்.

கடுகு எண்ணெய் விளக்கு ஏற்றுங்கள்
சனி அமாவாசை தினத்தன்று மாலை வேளையில் சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றுங்கள் அதோடு சனி பகவானுக்கு கருப்பு நிற துணியை வாங்கி கொடுங்கள்.

பின்னர் சனி சாலிசாவை பாராயணம் செய்யுங்கள்.

குருவின் அருளால் கோடீஸ்வரராகும் ராஜயோகம் அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் தெரியுமா?

அதுமட்டுமின்றி, அரச மரத்தடியில் சனி பகவானை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பித்ரு தோஷத்தில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

அனுமனை வணங்குங்கள்
சனி அமாவாசை நாளில் சனி பகவானை மட்டுமின்றி, அனுமனையும் வணங்குங்கள். அனுமனின் பக்தர்களுக்கு சனி பகவான் எப்போதும் ஆசியை வாரி வழங்குவார். எனவே சனி பகவானின் அருளைப் பெற நினைத்தால், சனி அமாவாசை அன்று கண்டிப்பாக அனுமனை நினைத்து அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள்.

ருத்ராட்சம் அணியுங்கள்
சனி அமாவாசை அன்று ஏழு முகம் கொண்ட ருத்ராட்சத்தை வாங்கி கங்கை நீரில் கழுவி அணியுங்கள். இப்படி செய்தால் வாழ்வில் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

மேலும் சனி அமாவாசை அன்று ‘ஓம் ப்ரம் ப்ரேம் ப்ருண் சஹ சனிச்சராய நம’ மற்றும் ‘ஓம் சனிச்சராய நம’ ஆகிய இரண்டு மந்திரங்களையும் சொல்ல வேண்டும்.
முக்கியமாக இந்நாளி ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.

கருப்பு நிற பொருட்களை தானம் செய்யுங்கள்
சனி அமாவாசை அன்று ஏழைகளுக்கு கருப்பு உளுத்தம் பருப்பு, கருப்பு நிற துணி போன்ற பொருட்களை தானம் செய்தால், சனி தோஷம் நீங்கி, சனிபகவானின் அருள் கிட்டும்.