சனிப்பெயர்ச்சி 2022: அசுர பலம் யாருக்கு? எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசியினர்கள்;

பொதுவாக சனி பெயர்ச்சி என்றாலே அனைவரும் மிகவும் கவனமாக பார்ப்பார்கள் படிப்பார்கள். சனி பெயர்ச்சியாகும் போது, சிலருக்கு ஏழரைச் சனியாகவும், சிலருக்கு மங்கு சனியாகவும், சிலருக்கு பொங்கு சனியாகவும் இருந்தால், சிலருக்கு மட்டும் தங்கு சனியாக இருப்பார். மற்றும் சிலருக்கு மரணச் சனியாக இருப்பார்.

இப்படி பல சிறப்புகளைப் பெற்றாலும் சனீஸ்வரரைப் பார்த்து மற்ற கிரகங்களைவிட மக்கள் அதிகம் பயப்படுவது ஏன்? ஏனென்றால் தவறுக்கு நீதிபதியாய் நின்று தண்டிப்பவரும், கண்டிப்பவரும் சனீஸ்வரரே என்பதால் தான் அனைவருக்கும் பயம் ஏற்படுகிறது.

சனீஸ்வரர், நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லும் நக்கீரரைப் போல, பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் அவரவர் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலன்களை கொடுப்பவர்.

அதேப்போன்று, லக்னத்தின் மூன்றாம் இடத்தில் சனீஸ்வரர் இருந்தால், பணவருவாய், பிரபலம், செல்வாக்கு என மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். லக்னத்தில் இருந்து ஆறாம் வீட்டில் சனீஸ்வரர் அமர்ந்திருந்தால் தன யோகம் கிடைக்கும்.

அதேபோல, சத்ரு ஜெயம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும். மேலும், லக்னத்தில் இருந்து ஆறாம் வீட்டில் சனீஸ்வரர் அமர்ந்திருந்தால் தன யோகம் கிடைக்கும்.

சத்ரு ஜெயம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும். அதன்படி, மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, சிம்மம், மீனம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சனி அசுபர் எனவே இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இவர்களுக்கு சனீஸ்வரர், 12 ராசிகளில் 1, 2, 4, 5, 7, 8, 9, 10 வீடுகளில் சஞ்சரிக்கும்போது, கோச்சாரத்தில் கெடுபலனைத் தருவார்.

ஆறுதலான விஷயம் என்னவென்றால், சனி தீமை செய்யும் இடத்தில் இருந்தாலும், பிற நல்ல கிரகங்களின் பார்வையும் சேர்க்கையும் இருந்தால், சனியின் கெடு பலன்களில் இருந்து தப்பிக்கலாம்.