2022 ஆம் ஆண்டின் 5 ஆவது மாதத்தில் நுழைந்துள்ளோம்.
நிச்சயம் அனைவரும் நம்முடைய ராசிக்கான மே மாத பலனைத் தெரிந்து கொள்ள விரும்புவோம்.
இதில் நற்பலன்கள் அனைவருக்குமே ஒவ்வொரு விஷயத்தில் கிடைத்தாலும், சில ராசிகளுக்கு நற்பலனை விட மோசமான பலன்களே அதிகம் இருக்கும்.
இப்போது 2022 மே மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டவசமான மாதம் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இம்மாதத்தில் வாழ்வில் எவ்வித நல்ல மாற்றங்களும் ஏற்படாது. இந்த மே மாதத்தில் நிதி பொறுப்புக்கள் அதிகரிக்கும்.
நீங்கள் விரும்பும் வெற்றியை இம்மாதத்தில் பெற முடியாது. பணியிடத்தில் உங்களுக்கு சம்பள உயர்வு கொடுத்தாலும், அதில் திருப்தி அடையமாட்டீர்கள். மொத்தத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு மே மாதம் மோசமான மாதம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கும் மே மாதம் மோசமான மாதமாகும். இம்மாதத்தில் உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளால் உயிருக்கே ஆபத்து கூட ஏற்படலாம்.
கூட்டாண்மை வியாபாரிகளுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இம்மாதத்தில் புதிய தொழிலைத் தொடங்காமல், அதேப் போல் பழைய தொழிலில் எந்த ஒரு புதிய முதலீடும் செய்யாமல் கவனமாக இருங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களும் இம்மாதத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
தொழிலில் முதலீடு செய்வதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்