சனி பெயர்ச்சி 2022 – ஏழரை சனியிடம் இருந்து தப்பி நிம்மதி பெருமூச்சு விடும் ஒரே ஒரு ராசி யார் தெரியுமா?

ஆணவக்காரர்களின் தலையில் தட்டி வைத்து சரியான தண்டனைகளைத் தருவார் சனிபகவான்.

இப்போது நிகழ்ந்துள்ள அதிசார சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் துன்பங்கள் முடிவுக்கு வரும் என்று பார்க்கலாம்.

மே மாதத்தில் இந்த 5 ராசிக்கு அடிக்கப்போகும் திடீர் யோகம் அதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்! மகிழ்ச்சியடையும் ராசிகள் இதோ

தனுசு
தனுசு ராசி குருபகவானின் வீடு. கடந்த ஏழரை ஆண்டுகாலமாக சனியால் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. சனிபகவானின் பிடியில் சிக்கிய நீங்கள் அல்லல்பட்டு துயரப்பட்டு வந்திருப்பீர்கள். இனி உங்கள் துயரங்கள் குறையும், சங்கடங்கள் தீரும் காலம் வந்து விட்டது.

குடும்ப பாவத்தில் இருந்த சனி விலகுவதால் திருமணத்திற்கு முயற்சி செய்யலாம். பிரிந்து போன குடும்ப உறவுகள் ஒன்று சேர்வார்கள்.

எடுத்த காரியங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். சனிபகவான் புதிய வேலையை தருவார். வெற்றியும் முன்னேற்றமும் தேடி வரும். பண ஆதாயத்தால் கௌரவம் உயரும்.

மிதுனம்
கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக அஷ்டம சனியால் நிறைய கஷ்டங்களை அனுபவித்தீர்கள். சனி உங்கள் ராசிக்கு 8 மற்றும் 9 ஆம் வீட்டு அதிபதி. இனி புனித யாத்திரை செல்வீர்கள்.

ஏப்ரல் மாத இறுதியில் இருந்து ஜூலை நடுப்பகுதி வரை ஒன்பதாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால், கொடுத்த பணம், பொருட்கள் சற்று தாமதமானாலும் வந்து சேரும். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.

புதிய தொழில்கள் தொடங்குவதற்கு முன் நன்கு ஆலோசிக்க வேண்டும். காதல் விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து வரவும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும்.

எதிர்பார்த்த நல்ல செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும்.

கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும்.