2025 வரை சனி பகவானின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகும் ஒரே ராசி… பரிகாரம் தான் என்ன?

ஜனவரி 24, 2020 முதல், சனியின் தாக்கம் கும்ப ராசிக்காரர்களுக்கு தொடங்கிவிட்டது. சில ராசிகளுக்கு கிரகங்களின் பெயர்ச்சி நன்மை அளிக்கும் நிலையில், சில ராசிகளுக்கு பாரிய கஷ்டத்தினையும் ஏற்படுத்தும்.

கும்ப ராசியில் சனிபகவான்
நீதியின் கடவுள் என்று அறியப்படும் சனிதேவரின் கருணை இருந்தால், பிச்சாதிபதியும் லட்சாதிபதியாவார். அதே நேரத்தில் சனி பகவானின் தீய பார்வை பட்டால், அந்த குறிப்பிட்ட நபர் நிம்மதியை இழப்பார்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, மகரம் மற்றும் கும்பத்தை ஆளும் கிரகம் சனி தேவன். தற்சமயம் சனி தனது ராசியில் கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார்.

சனி எந்த லக்னத்தில் அமர்ந்தாலும் அந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி ஆரம்பமாகிவிடும். பொதுவாக ஏழரை ஆண்டுகள் சனியின் தாக்கம் வீரியமாக இருக்கும்.

2025, மார்ச் 29 வரை சனி கும்ப ராசியில் இருக்கும் நிலையில், ஏழரை சனி 2022-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதியில் இருந்து கும்ப ராசிக்காரர்களுக்கு கெட்ட நாட்கள் ஆரம்பித்து விட்டது என்று சொல்லலாம்.

எழரை சனியின் இரண்டாம் கட்டம்
2022 ஏப்ரல் 29ம் தேதி சனி ராசி மாறியவுடன், கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியின் இரண்டாம் கட்டம் தொடங்கிவிட்டது. இரண்டாவது கட்டம் மிகவும் வேதனையைக் கொடுக்கக்கூடியது.

சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடுவதோடு, குறித்த நபரை பல பிரச்சினைகள் சூழ்வதோடு, எங்கும் ஆதரவு இல்லாமல் தவிப்பார்கள்.

ஜோதிடர்களின் படி, ஒரு நபரின் ஜாதகத்தில் சனி வலுவான நிலையில் இருந்தால், இந்த நேரம் அந்த நபருக்கு குறிப்பாக பலனளிக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் சனி பலவீனமான நிலையில் இருந்தால், அந்த நபர் பிரச்சனைகளால் சூழப்பட்டு வேதனையை அனுபவிப்பார்.