ஒருவரது ஜாதகத்தில் புதன் இருக்கும் நிலையைப் பொறுத்து தான் ஒருவருக்கு கிடைக்கும் பலன்கள் உள்ளன.
புதன் தற்போது ரிஷப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
நாளை 2022 மே 13 ஆம் தேதி மதியம் 12.56 மணிக்கு ரிஷப ராசியில் அஸ்தமனமாகி, 2022 மே 30 ஆம் தேதி மீண்டும் உதயமாவார்.
பொதுவாக கிரகங்கள் அஸ்தமன நிலையில் அதன் நற்பலன்களை வழஙகும் சக்தியை இழக்கும்.
ஆனால் புதன் ஏற்கனவே சூரியனுக்கு சற்று அருகில் இருப்பதால் அதன் விளைவு கடுமையாக இருக்காது. இதனால் பாதிப்பு ஓரளவாகவே இருக்கும்.
இப்போது ரிஷப ராசியில் அஸ்தமனமாகும் புதனால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், பலன்களையும் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் பெயரும், புகழும் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதியைப் பொறுத்தவரை, வரவு செலவு என இரண்டையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் தொழில் ரீதியாக, இக்காலத்தில் சில சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் சராசரியாகவே இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் தொழிலில் நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள். அதே வேளையில் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் வேலை மாற்றம் அல்லது இடமாற்றம் செய்ய வாய்ப்புள்ளது. வணிகர்கள் கடுமையான போட்டி மற்றும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் நீங்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வணிகர்கள் புதிய வணிக தொடர்புகளைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலம் சாதகமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை முடிப்பதில் சில தடைகளை சந்திக்க நேரிடும். அதோடு சில சவால்களும், இலக்குகளும் உங்களுக்கு வழங்கப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், அதே போல் சில கடினமான சூழ்நிலைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் பணியிடத்தில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், அதே போல் சில கடினமான சூழ்நிலைகளையும் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் தொழிலில் சில சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க நீங்கள் சரியாக திட்டமிட வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் தொழிலில் சராசரி மற்றும் பயனுள்ள முடிவுகளைப் பெறுவீர்கள் வியாபாரிகளுக்கு இக்காலத்தில் லாபமோ, நஷ்டமோ என எதுவும் இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் திட்டங்களை ஒழுங்கமைப்பது நல்லது.
மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் வேலையில் மாற்றத்தைக் காணலாம். வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட குறைவான லாபத்தை நீங்கள் பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.