குருவின் கோடி நன்மை… கஜகேசரி யோகத்தால் கோடி அதிர்ஷ்டம் யாருக்கு?

ஜோதிடத்தின் படி, நவகிரக நாயகர்களில் குரு பகவானுக்கு தனி சிறப்பு உண்டு. குருவின் பார்வையால் தான் மங்களங்கள் ஏற்படும்.

திருமணம் நடைபெறுவதற்கும், நிம்மதியான மணவாழ்வுக்கும் அச்சாரம் இடுபவர் குரு தான்.

இந்த ஆண்டில், குரு பகவான் பிலவ ஆண்டின் கடைசி நாளான பங்குனி 30 (ஏப்ரல் 13) அன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியானார்.

அதன்படி, குரு எந்த இடத்தில் அதாவது எந்த ராசியில் அமர்ந்திருக்கிறாரோ அந்த ராசிக் காரர்களைவிட, அவரின் பார்வை எந்த ராசியின் மீது விழுகிறதோ, அதன் பலன் மிகவும் கவனமாக பார்க்கப்படுகிறது.

ஒரு ராசிக்கு, , 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் . குரு பகவான் அமர்ந்திருந்தால் சுப பலன்கள் கிடைக்கும். அதிசாரமாக கும்பத்திலிருந்து, மீன ராசிக்கு சென்ற குரு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாமல், மீனத்திலேயே சஞ்சரிக்கிறார்.

மீன ராசியிலேயே 2023 ஏப்ரல் 30 வரை குரு பகவான் இருப்பார். குரு பகவான் அடுத்த ஓராண்டு காலத்தில் ராசிக்கு ஏற்றவாறு. அனைவருக்கும் வெவ்வேறு நன்மைகளைத் தர உள்ளார்.

குருவின் அதிர்ஷ்ட யோகத்தால், கஜகேசரி யோகம், குருமங்கள யோகம், குரு சந்திர யோகம், சகட யோகம், ஹம்ச யோகம் அகியவை ஆகும்.

புதன் வக்ர பெயர்ச்சி பலன்.. இனி இந்த ராசியினர்களுக்கு பொற்காலம் தான்!

கஜகேசரி யோகம்
சந்திரன் இருக்கும் ராசியில் இருந்து குரு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தால் கஜகேசரி யோகம் உருவாகும்.

இந்த யோகத்தினால், செல்வம், செல்வாக்கு, வீடு, வாகனம், உயர் பதவி பெற்று மதிப்பும் மரியாதையுமாக வாழலாம்.

குரு மங்கள யோகம்
குருவுடன் செவ்வாய் சேர்ந்தால், அது குரு மங்கள யோகம் என்று அழைக்கப்படுகிறது.

குருவுக்கு கேந்திரத்தில், செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் உண்டாகிறது.

குரு மங்கள யோகம் இருந்தால், வீடு, இடம் என அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் தேடி வரும்.

குரு சந்திர யோகம்
சந்திரன் இருக்கும் ராசியில் ,5,9 ஆகிய இடத்தில் குரு இருந்தால், குரு சந்திர யோகம் உருவாகிறது.

இந்த யோகத்தை பெற்றவர்கள் பிரபலமடைவார்கள். சமூகத்தில் செல்வாக்கு பெறுவார்கள்.

சகட யோகம்
குரு அமர்ந்திருக்கும் இடத்தில், 6, 8, 12 ஆகிய இடங்களில் சந்திரன் வீற்றிருந்தால் சகட யோகம் உருவாகும். சகட யோகம் என்றால் சக்கரம் என்று பொருள்.

சகட யோகம் பெற்றவர்களின் வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும்.

ஹம்ச யோகம்
சந்திரனுக்கு கேந்திரத்தால், குரு உச்சம் பெற்றிருந்தால், ஹம்சயோகம் உருவாகிறது.

ஹம்ச யோகம் பெற்றவர்கள் பார்ப்பதற்கு அழகானவர்களாகவும், பார்ப்பதற்கு கவர்ச்சியானவர்களாகவும் இருப்பார்கள்.

அவர்களின் வாழ்க்கை முறை சீரானதாக, ஒழுக்கம் நிறைந்ததாக அமையும்.