செவ்வாய் பெயர்ச்சியின் மாற்றம்… அடுத்த மாதம் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசியினர்கள்! உங்க ராசி இருக்கா?

செவ்வாய் பெயர்ச்சியானது மே 17ம் தேதியில் இருந்து மீன ராசியில் பிரவேசித்துள்ளார். இவர் வருகிற 27 ஜூன் காலை 6 மணி வரை இந்த ராசியில் இருப்பார்.

அதன் பின் செவ்வாய் மீன ராசியிலிருந்து விலகி மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். எனவே செவ்வாய் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 12ம் வீட்டில், ஜூன் வரை செவ்வாய் பெயர்ச்சியாகிறார். இந்த வீட்டில் செவ்வாய் பெயச்சியாவது உங்களுக்கு அசுபமாக இருக்கும்.

இந்த நேரத்தில் அதிக எச்சரிக்கைவுடன் இருப்பது அவசியம். நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவேண்டும். தேவையற்ற பண செலவுகள் உண்டாகும். மன உளைச்சல் அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியினர்களுக்கு ஜூன் மாதம் செவ்வாய் எட்டாம் வீட்டில் பெயர்ச்சியாகுகிறார். இதனால் கோபம், உக்கிரமாக மாறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது அவசியம். திடீர் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும். உத்தியோகம் மற்றும் தொழிலில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.

கன்னி
கன்னி ராசிக்கு, ஜூன் மாதத்தில், செவ்வாய் பெயர்ச்சி 7வது வீட்டில் பெயர்ச்சியாகிறார். திருமண வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்கும்.

தொழிலில் தொய்வு ஏற்படும், வீடு, வாகனம் வாங்கும் போது எச்சரிக்கைவுடன் இருக்கவேண்டும். உத்தியோகத்தில் கலவையான சூழல் உண்டாக்கும். உறவு மேம்படும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.