ஜூன் மாத ராசிபலன்.. அஷ்டம சனியால் பெரிய யோக ராசிக்காரர் யார்? இந்த ராசிக்கு இனி ராஜயோகம் தானாம்!

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.

இந்த மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் அதிர்ஷ்டம் வரும், சிலருக்கு யோகம் ஏற்படும்.

ஜூன் மாதம் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படியிருக்கும் என்ன பலன்களை கொடுப்பார் என பார்க்கலாம்.

கடகம்
கடக ராசியினர்களுக்கு குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் செவ்வாயுடன் இணைந்து குரு மங்கள யோகத்தை தரப்போகிறார்.

இதனால் சந்திரன் பயணமும் இணைந்து பலத்தை தரப்போகிறார். சனிபகவான் அஷ்டமத்து சனியாக அமர்ந்து தடையை தருவார் என்றாலும் குருவின் பார்வை பலத்தால் நன்மைகள் நடைபெறும்.

யோக பலன்கள்
தர்ம கர்மாதிபதி யோகம் இந்த மாதம் செயல்படப்போகிறது. இதனால் பல எதிர்ப்புகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும்.

எந்த நெருக்கடியான பிரச்சினைகளையும் எதிர்கொள்வீர்கள். திடீர் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். அலுவலகத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரப்போகிறது.

சனி ஏற்படுத்தும் தடைகள்
சந்திரன் மனதிற்கு இனிய காரியங்களை நிகழ்த்தி கொடுப்பார். எனவே சந்திராஷ்ட நாட்கள் தவிர்த்து புதிய முயற்சிகளை செயல்படுத்துங்கள்.

வெற்றிகள் கை கூடி வரும். காதல் விவகாரங்கள் உற்சாகத்தை தரும். சின்னச் சின்ன குழப்பங்கள் வர வாய்ப்பு உள்ளது விட்டுக்கொடுத்து செல்லவும்.

ஆரோக்கியத்தில் கவனம்
தேவை சூரியன் 12ம் இடத்திற்கு வரப்போவதால் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சின்ன சின்ன வலிகள் வந்து நீங்கும். மருத்துவ செலவுகள் வர வாய்ப்பு உள்ளது.

எதையும் திட்டமிட்டு செயல்படுத்துங்கள். எதிர்பார்க்காத வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் யோகங்கள் நிறைய உள்ளதால் எதையும் எளிதில் சமாளிக்கும் மாதமாக ஜூன் மாதம் அமைந்துள்ளது.