ஜூன் மாதத்தில் சிலருக்கு கல்யாண யோகம் கை கூடி வரும்.
ஜூன் மாதம் கும்பம் மற்றும் மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான யோகங்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கும்பம்
சனி வக்ரமடைந்து பயணம் செய்வதால் தடைபட்ட காரியங்கள் இனி தடைகள் நீங்கி வெற்றிகரமாக நடைபெறும்.
செய்யும் தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும். தன வாக்கு ஸ்தானத்தில் குரு செவ்வாய் இணைந்து மங்கள யோகத்தை தரப்போகிறது. பண பலம் அதிகரிக்கும்.
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மன நிலை உற்சாகமாக இருக்கும். சொன்னதை செய்யக்கூடிய தைரியம் அதிகரிக்கும்.
புத்தியில் தெளிவு பிறக்கும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும்.
மீனம்
குரு பகவானால் செயல்களை உறுதிகயாவும் தைரியமாகவும் செய்வீர்கள். நற்சிந்தனைகள் அதிகரிக்கும். செவ்வாயுடன் இணைந்து குரு மங்கள யோகம் கை கூடி வந்துள்ளது.
அதிர்ஷ்டத்தோடும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய வேலைக்காக முயற்சி செய்வீர்கள். எதையும் வெளிப்படையாக பேசுவீர்கள். சில நேரங்களில் இது வெற்றிகரமாக கை கொடுக்கும்.
பண வரவு அதிகரிக்கும். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். மனதாலும் உடலாலும் உற்சாகமாக செயல்படுவீர்கள்.
மாத பிற்பகுதியில் நல்ல வேலை கிடைக்கும். திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவி இடையே சந்தோஷம் கைகூடி வரும்.