ஜூன் 5ம் தேதி சனீஸ்வரன் கும்பத்திலிருந்து வக்ர பெயர்ச்சியாக அதாவது பின்னோக்கி மீண்டும் மகர ராசிக்கு செல்லும் வகையில் நகர்ந்துள்ளார்.
ஜூலை 12ம் தேதி மகர ராசியை சென்றடைவார்.
பிற்போக்கு பெயர்ச்சியால் சனி பகவானால் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுப்பார் என்று சுருக்கமான பார்ப்போம்.
மேஷ ராசி
சனியின் வக்ர பெயர்ச்சியால் உங்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை முயற்சிக்கும், புதிய வாய்ப்புகள் பெற வாய்ப்புள்ளது. சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்கு சனியின் வக்ர பெயர்ச்சியின் மூலம் சனி உங்கள் கௌரவத்தை அதிகரிக்கும். அதே நேரத்தில், இந்த ஒரு மாத காலத்தில் உங்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.
கடக ராசி
திருமணம் சார்ந்த விஷயங்கள், வரன் அமைய ஏற்ற காலம். திருமண வாழ்க்கையில் சற்று அலட்சியமாக செயல்படுவீர்கள். அதனால் துணையுடன் மன ஸ்தாபம் ஏற்படலாம். சில குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள்.
மிதுன ராசி
மிதுன ராசிக்கு குடும்ப மகிழ்ச்சி கிடைப்பது கடினம். அதே சமயம் பணி தொடர்பான சாதகம் ஏற்படும். பெட்ரோலியம், சுரங்கம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த சனி வக்ர நிலை சுப பலன்களைத் தரும்.
சிம்ம ராசி
கூட்டு வேலை செய்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். திருமண வாழ்விலும் சில பிரச்சனைகள் வரலாம். குடும்ப பிரச்சனைகள் ஏற்படும்.
கன்னி ராசி
வக்ர சனியால் கன்னி ராசிக்கு சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இடமாற்றம் விரும்பக்கூடிய நபர்களுக்கும், நல்ல இடத்தில் உங்களின் பணி அமைய சாதகமான காலமாக இருக்கும்.
துலாம் ராசி
சுப பலன்கள் கிடைக்கக் கூடியதாக இருக்கும். வீடு, மனை, வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்குவதற்கு ஏற்ற காலம். நீங்கள் செய்யும் பணியில் நன்மைகள் உண்டாகும். வெற்றி கிடைக்கப் பெறுவீர்கள்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்கு பல சுப பலன்கள் கிடைத்தாலும், சில எதிர்மறையான விளைவுகள் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். உங்கள் தாயின் உடல்நிலை மோசமாகலாம். உங்கள் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
தனுசு ராசி
வேலை தேடி அலைபவர்களுக்கு உகந்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும். சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பு இருக்கும்.
மகர ராசி
சனி பகவானின் வக்ர பெயர்ச்சி உங்கள் ராசியை நோக்கி நகர்கிறது. வேலை மாற்றம், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். எந்த ஒரு செயலை கையில் எடுத்தாலும் அதில் வெற்றி உண்டாகும்.
கும்ப ராசி
கும்ப ராசியில் சனியின் வக்ர பெயர்ச்சி நடக்கிறது. ஜென்ம ராசியில் இருப்பதால் உங்கள் அமைதியின்மையை அதிகரிக்கும். இருப்பினும் உங்களின் எந்த ஒரு பணியிலும் நன்மை பயக்கும். புதிய வேலை அல்லது போட்டித் தேர்வில் நல்ல பலன் கிடைக்கும்.
மீன ராசி
சனியின் இந்த நிலை உங்கள் செலவை லாபமாக மாற்றப் போகிறார். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்ய விரும்பினால், இந்த நேரத்தில் அதைச் செய்யலாம், இது எதிர்காலத்தில் உங்களுக்கு பலன்களைத் தரும்.