சனி மற்றும் புதனின் அருளால்… இந்த 4 ராசிக்கு வீடு தேடி அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு வரப்போகிறது தெரியுமா?

ஜோதிடத்தின் படி ஜூன் முதல் வாரத்தில், சனி மற்றும் புதன் ஆகிய 2 முக்கிய கிரகங்களின் இயக்கம் மாறியது. இப்படிப்பட்ட நிலையில் இந்த இரண்டு கிரகங்களின் மாறியுள்ள நிலையால் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.

மேஷம்
மேஷ ராசிக்கு சனி மற்றும் புதனின் சஞ்சாரத்தால் விதியை மாற்றும் அளவு அனுகூலமாக இருக்கும். இவர்கள் தொழில்-வியாபாரத்தில் அதிகப்படியான பலன்களை அடைவார்கள்.

வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பணவரவு அதிகரிக்கும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் தற்போது உள்ளது.

மேலும், புதிய விஷயங்களைத் தொடங்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். வியாபாரத்திலும் பல புதிய முயற்சிகளை தற்போது எடுக்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியினர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். அடுத்து பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றுக்காக காத்திருப்பவர்களின் காத்திருப்பு இப்போது தீரும்.

அனைத்துக்கும் அனுகூலமான நேரமாக இது இருக்கும். போதுமான பணம் கையில் இருக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

நீண்ட நாட்களாக ஒரு இடத்தில் சிக்கி இருந்த பணம் கைக்கு கிடைக்கும். பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்கு இந்த சனி மற்றும் புதனின் அருளால் மிக நல்ல பலன்களை அளிக்கும். தடைபட்ட வேலைகள் தற்போது நடந்து முடியும்.

புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பயணங்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான பல நீகழ்வுகள் நடக்கும்.

வியாபாரிகள் சிறப்பாகச் செயல்படுவார்கள். அவர்களின் லாபமும் பெருகும், வேலையும் விரியும்.

தனுசு
தனுசு ராசிக்கு புதனின் நிலை மாற்றமும், சனியின் வக்ர நகர்வும் நன்மை தரும். இதுவரை தடைப்பட்டிருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும்.

வேலையில் வெற்றி உண்டாகும். அரசுப் பணிகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றி பெறலாம். சாதகமான பண வரவு இருக்கும்.

புதிய வழிகளில் பணம் பெறுவீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தனுசு ராசிக்காரர்கள் தற்போது வியாபாரத்தை விரிவுபடுத்தலாம்.

அதிக லாபம் பெறுவதற்கான காலகட்டமாக இது இருக்கும். தொடர்ந்து முழு ஈடுபாட்டுடன் மட்டுமே எந்த தொழிலிலும் இறங்குங்கள். வெற்றிக்கான மாதம் இது….