சனியின் வக்ர பெயர்ச்சி! இந்த 5 ராசிக்காரங்களுக்கு பெரிய நிதி இழப்பு ஏற்படுமாம்! காத்திருக்கும் ஆபத்து… எச்சரிக்கை

ஜூன் 05 ஆம் தேதி சனி கும்ப ராசியில் பின்னோக்கி வக்ரமாக பயணிக்கிறார்.

இந்த வக்ர நிலையில் சனி 141 நாட்கள், அதாவது அக்டோபர் 23 ஆம் தேதி வரை இருப்பார். இதற்கிடையே சனி ஜூலை 12 ஆம் தேதி மகர ராசியில் இருப்பார். அதன் பிறகு 2023 ஜனவரி 17 ஆம் தேதி அன்று மீண்டும் கும்ப ராசிக்கு செல்வார்.

எனவே 2022 ஜூலை 12 ஆம் தேதி முதல் தனுசு, மகரம் மற்றும் கும்ப ராசிகளுக்கு மீண்டும் ஏழரை சனி தொடங்கும்.

இந்நிலையில் சனியின் வக்ர பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்கள் பெரும் பண இழப்பை சந்திக்க நேரிடும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாராத்திலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

முதலீடு ஏதேனும் செய்திருந்தால், அதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சில நாட்களுக்கு புதிய முதலீடுகளை செய்யாமல் இருப்பது நல்லது. தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு திடீரென்று சில நல்ல செய்திகள் வரலாம். பணியிடத்தில் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது.

வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சுப காரியங்களுக்கு அதிக பணத்தை செலவழிப்பீர்கள். இதனால் சற்று பண பற்றாக்குறையை சந்திக்க வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாகும். முதலீடு செய்வதற்கு நல்ல காலம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதைத் திரும்ப பெறுவதில் சிரமம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

நீண்ட தூர பயணங்களைத் தவிர்த்திடுங்கள். முதலீடு செய்வதாக இருந்தால் புத்திசாலித்தனமாக செய்யுங்கள். இல்லையெனில் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம். மனம் எப்போதும் ஒருவித பதற்றத்துடன், அமைதியிழந்து இருக்கும்.

செலவுகள் அதிகரிப்பதாலும் பிரச்சனைகள் ஏற்படும். உங்களின் வரவு செலவு பாழாகலாம். முதலீடு செய்வதற்கு இது சிறந்த காலம் அல்ல.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு திடீரென்று செலவுகள் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நஷ்டம் ஏற்படக்கூடும். வெளிநாடு செல்வதற்கு விசா பிரச்சனையை சந்திப்பீர்கள்.

ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். கடல் பயணம் மேற்கொள்வதை இக்காலத்தில் தவிர்த்திடுங்கள்.