ஜூன் 18ம் தேதி சுக்கிர பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
ரிஷப ராசி தான் ஆளக்கூடிய சொந்த ராசி என்பதால் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளார்.
இந்த அமைப்பால் இரண்டு ராசியினருக்கு மகாலட்சுமி யோகமும், பல்வேறு அதிர்ஷ்டங்களும் கிடைக்க உள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு ஜூன் 18 முதல் ஜூலை 12 வரையிலான இந்த காலகட்டத்தில் தங்கள் தொழிலை முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி பெறுவார்கள். நீங்கள் நம்பாத சில இல்லாத இடத்திலிருந்தும் திடீர் நற்பலன்களைப் பெறலாம்.
இந்த காலகட்டத்தில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு குறித்த நல்ல செய்தி கிடைக்கும்.
இந்த நேரத்தில் உங்களின் அறிவுத்திறன் மேம்படும். பொருள் இன்பங்களை அனுபவிப்பீர்கள். குடும்பத்தில் அன்பு மற்றும் நல்லிணக்கம் அதிகரித்து மகிழ்ச்சி கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு மகா லட்சுமி நாராயண யோகத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள்.
குடும்ப வாழ்க்கை மிகவும் இனிமையானதாக இருக்கும்.
வாழ்க்கைத்துணை மூலம் ஆதாயம் அடைவீர்கள்.
எதிலும் லாப வாய்ப்பு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ள விருச்சிக ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் இந்த சுப யோகத்தில் தங்கள் முயற்சியில் வெற்றி பெறுவார்கள்.