ஜோதிட சாஸ்திரத்தின் படி குருவின் ராசி மாற்றத்தால் சில ராசியினர்களுக்கு நல்ல பலன்களை அளிக்க உள்ளது. குரு பகவான் செல்வம், பெருமை, திருமண வாழ்க்கை, குழந்தைகள் மற்றும் கல்வி போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறது.
இன்னும் மூன்று நாட்களில், அதாவது ஜூன் 20 ஆம் தேதி, குரு பகவான் கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வார். இதையடுத்து, 22 ஏப்ரல் 2023 வரை அவர் இங்கு இருப்பார்.
இந்த ராசி மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிக நல்ல பலன்களை தரும். யார் அந்த அதிர்ஷ்ட ராசியினர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசியினர்களுக்கு இந்த 3 நாட்களில் குருவின் மாற்றம், உங்களுக்கு நல்ல காலமாக இருக்கும். இதனால் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
தொழிலில் லாபம் உயரும். இந்த நேரத்தில் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். இந்த காலத்தில் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
இந்த பயணம் அனுகூலமான பல நன்மைகளை அள்ளித் தரும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள்.
துலாம்
துலாம் ராசியினர்களுக்கு குருவின் மாற்றத்தால் பொருளாதார ரீதியாக நல்ல வகையில் இருக்கும். தொழிலில் பண ஆதாயத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் உண்டாகும்.
சொத்து வாங்கவும் விற்கவும் யோகம் உண்டாகும். இருப்பினும், இந்த ராசிகள் வெளியே செல்லும் போது எச்சரிக்கை அவசியம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் பல நன்ன பலன்களை அளிக்கும். இருப்பினும், இந்த காலத்தில் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
வேலைகளிலும் வெற்றியைத் தரும். இந்த காலகட்டத்தில் பணம் மற்றும் குடும்ப சொத்து ஆதாயங்கள் கிடைக்கலாம்.
நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு குருவின் மாற்றத்தால் இந்த நேரம் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பண வரவு அதிகமாக இருக்கும்.
குருவின் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்த்தல்அவசியம்.
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். தொழிலில் லாபம் உண்டாகும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.