சொல் வாக்கிற்கு என்று தனியாக செல்வாக்கைப் பெற வேண்டுமென்றால் இந்த ஒரு பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள்.
பிறகு உங்களுடைய சொல்லுக்கு ஒரு தனி மதிப்பே வந்துவிடும்.
நீங்கள் சொல்லக்கூடிய வாக்கும் பலிகும்.
அடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்கை சொன்ன நேரத்தில் காப்பாற்றி கொடுப்பீர்கள். அதற்காக யாருக்காவது சாபம் கொடுத்துவிட்டு அது பலிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது.
நல்லதையே நினைத்து நல்லது மட்டுமே பேசி நல்ல விஷயங்களை சாதித்துக் கொள்ள இந்த பரிகாரம் உங்களுக்கு உடனடியாக நல்லதொரு பலனை கொடுக்கும்.
பரிகாரம்
காலையில் எழுந்து பல் தேய்த்துவிட்டு வாயை முதலில் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
அதன் பின்பு வெறும் தண்ணீரைக் கொஞ்சமாக பருகிக் கொள்ளுங்கள். ஒரே ஒரு ஏலக்காயை எடுத்து உங்களுடைய பல் இடுக்குகளில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து ‘ஓம் ஸ்ரீம்’ என்ற வார்த்தையை 27 முறை உச்சரிக்க வேண்டும்.
அப்போது உங்களுடைய வாயில் ஏலக்காயில் இருந்து உமிழ்நீர் சுரக்கும். அந்த உமிழ் நீரை அப்படியே விழுங்கி விடலாம். மந்திரத்தை உச்சரித்து விட்டு ஏலக்காயை வெளியே துப்பி விடலாம்.
தொடர்ந்து 48 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்களுடைய வாக்கு பலிக்க தொடங்கும்.
உங்களுடைய சொல்லுக்கு ஒரு செல்வாக்கு கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய இடத்திற்கு உங்களை இந்த பரிகாரம் கொண்டு செல்லும்.