12 ராசிக்குமான ஜூலை மாத பலன்கள் – பண யோகத்தை சந்திக்கப் போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார் தெரியுமா!!

2022 ஆம் ஆண்டின் ஏழாவது மாதத்தில் நுழைய உள்ளோம்.

ஜூலை மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது.

உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமான ஜூலை மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் பல வழிகளில் அற்புதமாக இருக்கும். வாழ்க்கை துணைக்கும் உங்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அனைத்து வழிகளிலும் ஜூலை மாதம் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வேலையில் அதிர்ஷ்டத்தின் காரணமாக முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின் வருமானம் உயரும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் சாதகமான மாதமாக இருக்கும். சகோதரர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். இருப்பினும் காதல் வாழ்க்கையில் சில தவறான புரிதல்களால் பிரச்சனைகளை ஏற்படலாம். நிதி நிலைமை சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் கலவையானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ரகசிய ஆதாரங்களில் இருந்து பணத்தைப் பெறுவீர்கள். இம்மாதத்தில் நல்ல பண ஆதாயம் உண்டு. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் தங்கள் பணியிடத்தில் பலம் பெறுவார்கள். மாணவர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் அன்பும் பாசமும் இருந்தாலும், ஆணவத்தால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி நிலை நன்றாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் சில துறைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றமும், பதவி உயர்வும் இருக்கும். ஆனால் மாணவர்கள் இம்மாதத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். இருப்பினும் இலக்குகளை அடைவார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் கலவையான பலன்களைத் தரும். பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு இம்மாதத்தில் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

மாணவர்கள் சில சிக்கல்களை சந்திக்கலாம். குடும்ப சூழ்நிலை சற்று மோசமாக இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் பல நற்பலன்களைப் பெறுவார்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் இருப்பார்கள். குடும்ப சூழல் நன்றாக இருக்கும். இதுவரை குடும்பத்தில் இருந்த மோதல்கள் மறையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இம்மாதம் கலவையான பலன்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும்.

நிதி நிலை வலுவாக இருக்கும். வெற்றிக்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மாதத்தின் முதல் பாதியில் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் உற்சாகம் நிறைந்திருக்கும். வியாபாரம் மற்றும் வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு இம்மாதம் சிறப்பானதாக இருக்கும். நிதி நிலை சீராக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் அனைத்து துறைகளிலும் வெற்றியைத் தரப் போகிறது. வியாபாரிகள் மற்றும் பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பர புரிதலும் நம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் வெற்றியைத் தரும் மாதமாக இருக்கும். உங்களின் தொழில் வாழ்க்கை உயரும். மாணவர்களுக்கு இம்மாதம் நன்றாக இருக்கும்.

குடும்ப சண்டைகள் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். நிதி நிலை சீராக இருந்தாலும், செலவுகள் அதிகரிக்கும்.