இந்த மாதம் கும்பம் தொடங்கி மிதுனம் வரை வரிசையாக ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொறுத்து மகர ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்.
என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
மகரம்
இந்த மாதம் ஏழரை சனியில் ஜென்ம சனியின் பாதிப்பு மீண்டும் தொடங்குகிறது. காரணம் சனிபகவான உங்கள் ராசியில் வக்ரமடைந்து பயணம் செய்கிறார்.
தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.
சுக்கிரன், புதன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைந்துள்ளது. ஆட்சி பெற்ற சுக்கிரன் வேலையில் நல்ல பலனைத் தருவார். நினைத்த காரியம் நிறைவேறும். புது வேலைக்கு முயற்சி செய்யலாம்.
மாத பிற்பகுதியில் சுக்கிரன் ஆறாம் வீட்டிற்கு செல்கிறார். செவ்வாய் நான்காம் வீட்டில் சனியின் பார்வையில் பயணம் செய்வதால் வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.
குடும்ப வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
காதல் திருமணம் மாத முற்பகுதியில் சிலருக்கு கை கூடி வரும். தடைகளைத் தாண்டி வெற்றிகள் கைகூடி வரும். மாத பிற்பகுதியில் திருமணத்திற்கு ஏற்ற சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் வரன் தேடுவதை தள்ளிப்போடுங்கள்.
காதல் திருமணம் செய்ய ஆசைப்படுபவர்கள் பொறுமையோடும் நிதானத்தோடும் அணுகவும். கணவன் மனைவி இடையேயான சின்னச் சின்ன சச்சரவுகள் வந்து செல்லும். விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.
ஏழரை சனி காலம்
மாணவர்களுக்கு இது கல்விக்கு ஏற்ற காலம்.
ஏழரை சனியின் தாக்கத்தால் கல்வியில் கவனம் தேவை. சோதனையான காலமாக இருப்பதால் தெய்வ வழிபாடு அவசியம்.
கடின முயற்சிகளுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. எலும்பு, நரம்பு பிரச்சினைகள் வரலாம்.
வயிறு பிரச்சினைகள் வரலாம் உணவில் கவனம் தேவை. காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
தசைப்பிடிப்பு எட்டிப்பார்க்கும் கவனம் தேவை.