சனி விட்டாலும் ராகு விடாது? நெருப்பு ராசியில் கூட்டணி – என்னென்ன ஆபத்தெல்லாம் ஆட்டிப்படைக்க போகிறதோ?

செவ்வாய் ராகு சேர்க்கை நெருப்பு ராசியில் என்பதால் மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் ஏற்படும்.

சனி செவ்வாய் பகை கிரகங்கள் பார்வை, செவ்வாய் ராகு சேர்க்கை, கேது செவ்வாய் பார்வையால் பூமிக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துமாம்.

பொதுவாக பகை கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்தாலே, கூட்டணி சேர்ந்தாலோ பாதிப்புகள் ஏற்படும்.

செவ்வாய், ராகு கூட்டணி நெருப்பு ராசியான மேஷ ராசியில் இணைந்துள்ளது.

துலாம் ராசியில் இருந்து கேது பார்வை கிடைக்க கும்ப ராசியில் இருந்து சனியின் பார்வையும் செவ்வாய் ராகுவின் மீது விழுகிறது. செவ்வாய் ராகுவுடன் இணைவு மற்றும் கோட்சார வக்ர சனி, கேது பார்வை பெறுகிறார்.

செவ்வாய் ரத்தகாரகன், சகோதர காரகன், ராகு உடன் சேர்க்கை பெற்றுள்ளார். சனி ஆயுள்காரகன், செவ்வாயும், சனியும் பகை கிரகங்கள் ஒரு ராசியில் இரண்டும் சேர்ந்தாலோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலோ பாதிப்புகள் ஏற்படுவது இயற்கை.

எச்சரிக்கை..
இந்தியாவை பொருத்தவரை சில இடங்களில்,ரயில் விபத்து,மற்றும்,நெருப்பினால் ஏற்படும் விபத்து,நிலநடுக்கம்,ஏற்பட அதிக வாய்பு உள்ளது என்பதால் கவனம் தேவை. தமிழகத்தை பொருத்த வரையில் முக்கிய நகரங்களில் நெருப்பினால் விபத்துகள்,திடீர் கலவரங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே கவனம் தேவை.

மேஷம்
மேஷம் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியில் உள்ள ராகு உடன் இணைகிறார். மன அழுத்தம் ஏற்படும் காரணம் சனிபகவானின் நேரடி பார்வையும் கேதுவின் நேரடி பார்வையும் உங்கள் ராசியில் உள்ள செவ்வாய், ராகு மீது விழுகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே செவ்வாய் உங்கள் தளபதி..உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் ராகு உடன் அமர்ந்திருக்கிறார். உடல் நலக்கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளது. முதுகு பிரச்சினைகள் வரலாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தொழில் வருமானத்தில் லாபம் அதிகரிக்கும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். உடல் நலப்பிரச்சினைகள் தீரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். வெளி உணவுகளை சாப்பிட வேண்டாம். கர்ப்பிணிப்பெண்கள் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் தீர கணபதியை வணங்கவும்.

யாருக்கு பரிகாரம்
மேஷம், துலாம், ராசிக்காரர்கள் வாகனத்தில் செல்லும்போது தலைகவசத்துடன் செல்வது அவசியம்.

விபத்தோ,வம்பு வழக்கோ,வாய் தகராரோ நெருப்போ,மிகுந்த கவனம் தேவை.

நரசிம்மர்,வாராகி,ஆஞ்சநேயர்,விநாயகர், பிரித்யங்கரா,சரபேஸ்வரர்,ராகு கேது வழிபாடுகள் மந்திர பாராயணங்கள் செய்வது பாதிப்பை குறைக்கும்.