குரு வக்ர பெயர்ச்சி – இந்த ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகிறது !யாருக்கு பண மூட்டை கிடைக்கும்?

குருபகவான் இப்போது மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். அடுத்த மாதம் வக்ர கதியில் பயணப்பட போகிறார்.

குருவின் மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில அதிசய மாற்றங்கள் ஏற்படப்போகிறது.

யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

துலாம்
குரு வக்ர கதியில் செல்லும் காலத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வும் கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்.

விருச்சிகம்
நீங்கள் இந்த கால கட்டத்தில் புதிய வாகனம் வாங்கும் யோகம் வரும்.பழைய கடன் பிரச்சினை நீங்கும். குரு வக்ரமாக செல்லும் காலத்தில் வேலைச்சுமை கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவி தேடி வரும். உயரதிகாரிகளுக்கும் உங்களுக்கும் ஏற்பட்டநெருக்கடிகள் நீங்கும்

தனுசு
உங்களுக்கு சின்னச் சின்ன உடல் நலககோளாறுகள் வந்து நீங்கும். கடனாக வாங்கிய பணத்தை செட்டில் செய்வீர்கள். குரு வக்ரமாக செல்லும் காலத்தில் அலுவலகத்தில் வேல்பபளு கூடும். உடன் வேலை செய்பவர்கள், உயரதிகாரிகளிடம் வாக்குவாதம் தவிர்க்கவும்.

மகரம்
உங்கள் ராசிநாதன் சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் நோய்கள் வந்து நீங்கும். குருபகவான் வக்ரமாக செல்லும் காலத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல பண வருமானம் கூடும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் முடிவுக்கு வரும்.

கும்பம்
உடல் நலத்தில் அக்கறை தேவை. நடைபயிற்சி, உடற்பயிற்சி அவசியம். வக்ர கதியில் குரு பயணிக்கும் காலத்தில் திடீர் செல்வாக்கு கிடைக்கும். உங்களின் சொல்வாக்கு கூடும். சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் கூடும்.

மீனம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் பயணம் காலத்தில் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குரு வக்ரத்தில் செல்லும் காலத்தில் திடிர் பண வரவு வரும், ஷேர் மூலம் பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். சவாலான காரியங்களை வெற்றிகரமாக சாதித்துக் காட்டுவீர்கள்.