சனி வக்ர பெயர்ச்சியால் சனியின் பிடியில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? எச்சரிக்கை

ஜோதிட கணக்கீடுகளின் படி, சனி சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார்.

கும்ப ராசியில் நுழைந்ததால், மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபட்டார்கள்.

மேலும் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனி தொடங்கியது.

ஆனால், 2022 ஜூலை 12 ஆம் தேதி சனி வக்ர நிலையில் மகர ராசிக்கு செல்வதால், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபடுகிறார்கள்.

மேலும் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது.

சனியின் பிடியில் இருந்து விடுபட்ட கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

ஏழரை சனி
சனி பகவான் தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் உள்ளார்.

ஆனால் ஜூலை 12 ஆம் தேதி சனி வக்ர நிலையில் மகர ராசிக்கு செல்லவிருப்பதால், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு ஏழரை சனியின் தாக்கம் இருக்கும்.

அதேப்போல் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களும் சனியின் பிடியில் சிக்குவார்கள்.

ஆகவே இந்த பெயர்ச்சிக்குப் பின், இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சனியால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க, சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.

சனி தோஷத்தைக் குறைக்கும் பரிகாரங்கள்

  • சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் வழங்குங்கள்.
  • சனி தெய்வ வழிபாட்டில் இரும்பு பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள்.
  • கருப்பு எள்ளு மற்றும் உளுத்தம் பருப்பை தானம் செய்யுங்கள்.
  • சனி பகவானுக்கு கருப்பு துணி மற்றும் நீல நிற பூக்களை வழங்கி வணங்குங்கள்.
  • முக்கியமாக, சனி மந்திரமான ‘ஓம் ஷன் சனிச்சராய நமஹ’ என்னும் மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள்.