ஜோதிடத்தின் படி சூரியனின் ராசி மாற்றம் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுகிறார். இந்த வழியில் சூரியன் ஆண்டு முழுவதும் 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார்.
ஜூலை 16, 2022, சனிக்கிழமையன்று சூரியன் ராசியை மாற்றப் போகிறார். சந்திரனின் கடக ராசியில் சூரியன் நுழைவது அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தக் காலத்தில் சில ராசிக்காரர்கள் சுபமான நல்ல பலன்களைப் பெறுவார்கள். கடக ராசியில் சூரியனின் பிரவேசம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் கதவுகளைத் திறக்கும் என பார்ப்போம்.
மிதுனம்
மிதுன ராசியில் சூரியனின் ராசி மாற்றத்தால் பல நன்மைகளை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்.
அரசுப்பணியில் இருப்பவர்கள் அல்லது அரசுத்துறை சார்ந்த வேலைகளை செய்பவர்கள் பெரிய பலன்களை அடைவார்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியினர்களுக்கு சூரியனின் பிரவேசம் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். வர்த்தகங்கள், வணிகங்களில் ஈடுபட்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலத்தில் பெரும் லாபம் ஈட்ட முடியும்.
சிம்ம ராசிக்காரர்கள் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணங்கள் பெரிய நன்மைகளையும் தரும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.
துலாம்
துலாம் ராசியினர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் சாதகமாக இருக்கும். அவர்கள் தங்கள் தொழிலில் பெரிய வெற்றியை பெறலாம்.
ஏற்கனவே நல்ல வேலையில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பணமும் செல்வாக்கும் பெருகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர்களுக்கு சூரியப் பெயர்ச்சிக்குப் பிறகு ஒரு மாதத்திற்கு பல நன்மைகளைப் பெறுவார்கள்.
இந்த மாற்றம் உங்களுக்கு சாதகமான நன்மைகளை அளிக்கும். நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். இந்த நேரம் பல விஷயங்களுக்கு சாதகமாக இருக்கும்.
நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் இப்போது வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.