சனி வக்ர பெயர்ச்சி 2022 -12 ராசிகளுக்கான மின்னல் வேக பலன்கள்! திடீர் பணவரவு யார் யாருக்கு தெரியுமா?

மகரத்தில் சனியின் வக்ர நிலையில் சஞ்சரிப்பதால் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை ஒவ்வொரு ராசிக்கும் சுருக்கமாக பார்ப்போம்.

மேஷம்
உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். உங்களின் பொருளாதார நிலையில் ஏதேனும் ஒரு சாதக நிலை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்
நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறலாம். பதவி உயர்வு கிடைக்கும். தடைப்பட்ட வேலைகளை தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள். பல்வேறு வகையில் நன்மை வந்து சேரும். நல்ல அனுகூலம் உண்டாகக்கூடிய பயணங்கள் ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

மிதுனம்
அஷ்டம சனி பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் நல்ல ஆதரவைப் பெறுவீர்கள் என்றாலும், பேச்சில் நிதானம் தேவை. உங்கள் வாய் தான் உங்களுக்கு எதிரியாக அமையும் என்பதால், எந்த ஒரு இடத்திலும் பேச்சைக் குறைத்து வேலையில் முழு கவனம் செலுத்தி மேம்படுத்திக் கொள்வது நல்லது.

கடகம்
கடக ராசிக்கு இந்த அமைப்பால் கண்ட சனி பலன் கிடைக்கும். இதனால் உங்களுக்கு சில விஷயங்களால் எப்போதும் மன உளைச்சல் ஏற்படலாம். நன்கு ஆலோசித்து முடிவெடுக்கவும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும், வசதிகளில் குறை இருக்காது.

சிம்மம்
திருமண உறவில் கொஞ்சம் அக்கறையுடன் செயல்படவும். பணியிடம், வியாபார சந்தையில் உங்கள் எதிரிகள் ஆதிக்கம் செலுத்த நினைப்பார்கள். அதனால் எச்சரிக்கையாகச் செயல்படவும்.

கன்னி
கன்னி ராசிக்கு பல்வேறு விஷயங்கள் சாதக பலனைத் தரக்கூடியதாக இருக்கும். குழந்தைப் பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் தொடங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தடைப்பட்ட வேலைகள் நடந்தேறும். கல்வி சார்ந்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும். முன்பை விட உங்களின் நிலைமை சிறப்பாக இருக்கும்.

துலாம்
ஆன்மிக விஷயங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். இந்த காலத்தில் உங்களின் கோபத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். குடும்ப சொத்து சார்ந்த பிரச்னைகள் நீங்கும். உங்கள் பணியில் சில பிரச்னைகள் வரலாம். பண விஷயங்களில் புத்திசாலித்தனமான முடிவை எடுங்கள். வேலை விஷயத்தில் கவனமாக செயல்படுவது அவசியம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சியால் கிடைக்கும் வரப்பிரசாதத்திற்குக் குறை இருக்காது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். புதிதாக நீங்கள் மேற்கொள்ளும் உத்திகள் பயனுள்ளதாக இருக்கும். தொழில், வியாபாரம் சார்ந்த விஷயங்களில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.

தனுசு
உங்கள் பேச்சி இனிமையும், செயலில் நிதானமும் இருப்பது அவசியம். உங்களுக்கு ஏழரை சனியின் இறுதி நிலையான பாத சனி நடந்து கொண்டிருப்பதால் எதிலும் கவனமாக இருக்கவும். திடீர் பண ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் எந்த துறையில் நீங்கள் இருந்தாலும் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும்.

மகரம்
மகர ராசிக்கு ராசியிலேயே சனியின் சஞ்சாரம் நிகழ்கிறது. ஜென்ம சனி நிகழ்வதால் உங்களின் மதிப்பு, கெளரவம் குறைய வாய்ப்புள்ளது. எந்த ஒரு விஷயத்திலும் நேர்மையாக நடந்து கொள்வது அவசியம். உங்களை நிரூபிக்க கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்கு 12ம் வீட்டில் சனியின் சஞ்சாரம் நிகழ்வதால் ஏழரை சனியின் ஆரம்ப நிலையான விரய சனி பலன் கிடைக்கும். உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் உண்டாகும். உங்களின் எதிரிகள் பலம் பெறுவார்கள். முன்னேற்றத்தைத் தடுக்க முயல்வார்கள். பண விஷயத்தில் அதிக கவனத்துடன் செயல்படவும்.

மீனம்
மீன ரசிக்கு சனியின் இந்த சஞ்சாரம் நன்மை தருவதாக இருக்கும். லாப சனி நடப்பதால் சனியால் ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும். முதலீடு தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். சனியின் இந்த வக்ர நிலை காரணமாக நிதி நிலை மேம்படும். அற்புதமான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.