ஆடி மாதம் பொறந்தாச்சு – யார் யாருக்கு என்னென்ன யோகங்கள் தேடி வரும் தெரியுமா?

ஆடி மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்யும் மாதம். தட்சிணாயன புண்ணிய காலம் ஆரம்பமாகிறது.

இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சி, பார்வைகளைப் பொறுத்து மேஷம் முதல் கன்னி ராசி வரை பிறந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன யோகங்கள் தேடி வரும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. உங்களின் திறமை தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்திசாலித்தனம் பலிச்சிடும். மன தைரியம் அதிகரிக்கும்.

பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில், வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்க யோகம் வரும்.

பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும். ஆடி மாதத்தில் அவசரப்பட வேண்டாம்.கையில் இருக்கும் வேலையை விட்டு விட வேண்டாம். வேலை மாறுவதற்கு இது ஏற்ற காலம் அல்ல.

மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக நினைத்திருந்த காரியங்கள் கை வரும். உறவினர்களால் உதவிகள் தேடி வரும். கோபத்தை கட்டுப்படுத்தவும்.

உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பண வரவு வரும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும்.

கடகம்
ஆடி மாதம் கடக ராசிக்காரர்களுக்கு ஆதாயங்கள் நிறைந்த மாதம் கிடைக்கும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் நிறைய பண வரவு அதிகரிக்கும்.

தகவல் தொடர்புத்துறையில் நன்மைகள் நடைபெறும். எதிர்பாராத பண வரவு வரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நிறைய சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். காதல் கை கூடி வரும் கணவன் மனைவி இடையே இருந்த சிக்கல்கள் நீங்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் அம்மன் அருள் அதிகம் கிடைக்கப் போகிறது. சூரியன் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வரவுக்கு ஏற்ற செலவு கிடைக்கும் சிக்கனம் தேவைப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து விடும்.

கோபத்தை கட்டுப்படுத்துங்கள். எதிர்பாராத பண வரவு வரும். தந்தையின் சொத்து விற்பனையில் பங்கு கிடைக்கும். குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது. இந்த மாதம் பங்குச்சந்தை முதலீடுகளைத் தவிர்த்து விடவும்.

கன்னி
புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, ஆடி மாதத்தில் பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதம். சகோதரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பண வரவு அதிகம் வந்தாலும் கூடவே செலவுகளும் வரும். செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. குரு பார்வை கோடி நன்மையைக் கொடுக்கும். வேலை தொழில் மாற்றம் ஏற்படும். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு படையல் இட்டு வணங்கவும்.