ஆகஸ்ட் மாதம் சில முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அதன் சிறப்பு பலன் மூன்று ராசிக்காரர்களின் வாழ்வில் தென்படும். அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.
ஆகஸ்ட் மாதம் மூன்று கிரகங்கள் ராசி மாற்றம்:
ஜோதிடத்தின் படி, கிரங்களின் மாற்றம் மற்றும் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அதிலும், கிரங்களின் பெயர்ச்சி முக்கியத்தும் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படும்.
அதன்படி, 2022 ஜூலை மாதம் 5 கிரகங்கள் பெயர்ச்சியானது. அதே போன்று, ஆகஸ்ட் மாதம் 3 கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றி பெயர்ச்சியாக உள்ளது.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் முதல் பெயர்ச்சி 9 ஆம் தேதி 2022 அன்று நடைபெறும். இதன் இரண்டாவது பெயர்ச்சி ஆகஸ்ட் 11 தேதி ஆவணி அவிட்டம் அன்று நடைபெறும்.
இதையடுத்து, ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் கிரகம் கன்னி ராசியில் பெயர்ச்சியாவார். இதனுடன், ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது மற்றும் கடைசியாக சூரியன் பெயர்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நாளில் சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகுகிறார். மேலும், இதன் தாக்கம் குறிப்பாக இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிச்சயம் தென்படும்.
மிதுனம்:
ஆகஸ்ட் மாதப் பெயர்ச்சியால் மிதுன ராசியினரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்கள் உண்டாகும்.. இதன் போது வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். பணியிடத்தில் மரியாதை கூடும். அதுமட்டுமின்றி சமூகத்தில் கௌரவமும் உயரும். மேலும் குடும்பதில் ஒற்றுமை இருக்கும்.
துலாம்:
கிரகங்களின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை அளிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பெயர்ச்சியால் அதிக லாபம் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் அதிகரிக்கும். அதே சமயம் அரசுப் பணிகளில் ஈடுபடும் இந்த ராசிக்காரர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.தொழிலில் அதிக லாபம் உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதம் மூன்று கிரகங்களின் பெயர்ச்சியால் உற்சாகம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் அனைத்துப் பணிகளையும் செய்து முடிப்பீர்கள். இதுமட்டுமின்றி வியாபாரிகளுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். இதன் போது சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் பெருகும். இந்த பெயர்ச்சிகள் உங்களுக்கு மனநிறைவைத் தரும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.