கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியனுக்கு மகர ராசியில் பயணிக்கும் வக்ர சனியின் பார்வை கிடைக்கிறது.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பாதிப்பு வரும்.
என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் பார்க்கலாம்.
மேஷம்
இந்த மாதம் நான்காவது வீட்டில் பயணம் செய்யும் சூரியன் மீது வக்ரமடைந்த சனிபகவானின் பார்வை கிடைக்கிறது. வியாபாரம் நன்றாக லாபகரமாக இருக்கும். வேலையில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருப்பது அவசியம்.
ரிஷபம்
உங்களுக்கு நன்மைகள் அதிகம் நிறைந்த மாதமாக அமையும். மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக கண் தெரியாதவர்கள், காதுகேளாதவர்களுக்கு உதவி செய்ய நன்மைகள் அதிகம் நடைபெறும். சூரியனுக்கு சனியின் பார்வை கிடைப்பதால் யாருக்கும் பணம் கடனாகக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.
மிதுனம்
சனிபகவானின் பார்வை விழுவதால் பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் நிதானம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது நிதானம் அவசியம். கோபத்தைக்கட்டுப்படுத்துங்கள்.
கடகம்
உடல் உஷ்ணம் அதிகரிக்கும். சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம் கோபப்படுவீர்கள். கண்டகச்சனியால் ஞாபக மறதி ஏற்படும். உங்கள் ராசியில் உள்ள சூரியன் மீது சனிபகவான் பார்வை விழுவதால் பேச்சில் கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை.
சிம்மம்
வேலை செய்யும் இடத்தில் கூடுதல் சுமை ஏற்படும். வேலையில் கவனம் தேவை. தூக்க குறைபாடு ஏற்படும். பயணங்களின் போது கவனம் தேவை. குறிப்பாக இரவு நேர பயணங்களை தவிர்த்து விடவும். ஞாயிறு கிழமைகளில் பைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.
கன்னி
சூரியன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சனியின் பார்வையில் சூரியன் இருந்தாலும் நிதி விவகாரங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதுவும் இருக்காது என்றாலும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
துலாம்
சூரியன் மீது சனியின் பார்வை விழுவதால் வேலையில் கவனம் தேவை. வேலையில் கூடுதல் பொறுப்பும் சுமையும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளைப் பற்றி விமர்சித்து பேச வேண்டாம்.
விருச்சிகம்
சூரியனுக்கு சனியின் பார்வை கிடைப்பதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரும். சொத்து பாகப்பிரிவினை சாதகமாக முடியும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
தனுசு
சனிபகவானின் பார்வை விடுவதால் பணம் விசயத்தில் கவனம் தேவை. செலவில் சிக்கனம் தேவை. அப்பா வழியில் திடீர் மருத்துவ செலவுகள் வரும். எட்டாம் வீட்டில் பயணித்த செவ்வாய் 9ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் தடைகள் விலகும்.
மகரம்
பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. அரசு தொடர்பான காரியங்களில் கவனம். உங்கள் ராசியில் அமர்ந்துள்ள ராசிநாதன் சனிபகவானின் பார்வை நேர் எதிரே உள்ள சூரியன் மீது விழுகிறது. ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கும்.
கும்பம்
வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து விடவும். இரவு நேர பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். அதே நேரத்தில் சூரியன் மீது சனியின் பார்வை விழுவதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன கருத்து மோதல்கள் ஏற்படும் விட்டுக்கொடுத்து செல்லவும்.ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபடுவது மன நிம்மதியைக் கொடுக்கும்.
மீனம்
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். திடீர் மருத்துவ செலவுகளும் வரும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சனியின் பார்வை ஐந்தாம் வீட்டில் உள்ள சூரியன் மீது விழுவதால் கர்ப்பிணி பெண்கள் அதிக கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.