ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி பிறந்து விட்டது.
ஆகஸ்ட் 16ஆம் தேதி வரைக்கும் ஆடி மாதம் உள்ளது.
இந்த மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
துலாம்
வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் கணிசமான லாபத்தைக் கொண்டு வரும். கடினமாக வேலை செய்து காரியத் தடைகளை தகர்த்தெறிவீர்கள்.
விருச்சிகம்
வியாபாரங்களில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். பொருட்களை வாங்கி வைத்து விற்பதன் மூலம் பெரும் பணம் கிடைக்கும்.
தனுசு
எதிர்பார்த்த வங்கி லோன் தடையில்லாமல் வந்து சேரும். முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகமெடுக்கும். இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்து தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மகரம்
வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்படும். வேலை பார்த்த இடத்தில் சுமத்தப்பட்ட வீண் பழி அகலும். தொழிலை விரிவாக்கம் செய்ய பெருமுயற்சி எடுத்துக் கொள்வீர்கள்.
கும்பம்
பணவரவு அதிகரித்து பழைய கடன்களை அடைக்கும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தினருடன் கோடை வாச ஸ்தலங்களுக்குச் செல்வீர்கள்.
மீனம்
விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அடுத்தவர் மேல் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம்.