கடகத்தில் சூரியனின் சஞ்சாரம் ஆடி மாதமாகும்.
மகரத்தில் சனி வக்ர நிலையில் இருப்பதால் சமசப்தம யோகம் உருவாகிறது. இதனால் மக்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாகும்.
சில ராசிகளுக்கு ஆகஸ்ட் 17ம் தேதி வரை மோசமான பலன்கள் ஏற்படும். இதனால் 4 ராசியினர் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எந்தெந்த ராசியினர் பாதிக்கப்படுவார்கள், அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பரிகாரம் என்ன என்பதைப் பார்ப்போம்.
4 ராசிகளுக்கு எச்சரிக்கை
சூரியன் – சனி சம்பசப்தம சஞ்சாரத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் பாதகமான பாதிப்புகள் ஏற்படும்.
இருந்தாலும் மிதுனம், சிம்மம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய 4 ராசியினருக்கு சற்று கூடுதலாக அசுப பலன் உண்டாக வாய்ப்புள்ளது.
மிதுனம், சிம்மம், தனுசு மற்றும் கும்பம் ராசியினருக்கு வேலையில் தோல்வி, திட்டமிட்ட செயல்கள் சரியாக நடப்பதில் தாமதம் போன்ற விஷயங்கள் ஏற்படும்.
வேலை சம்பந்தமாக டென்ஷன் அதிகரிக்கும். பண இழப்புக்கான ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
முதலீட்டில் நஷ்டம் வரலாம். அதனால் முதலீடு சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.
முன்பைவிட சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் பாதிக்க வாய்ப்புள்ளது எச்சரிக்கையாக இருப்பது உத்தமம்.
எளிய பரிகாரங்கள்
சனி மற்றும் சூரியனின் இந்த நிலையால் ஏற்படும் பிரச்னைகளுக்கு சில பரிகாரங்கள் நல்ல பலனைத் தரும்.
துன்பங்களைக் குறைக்கும். ஆன்மிகத்திற்கான அற்புத மாதம் ஆடி மாதம் நடந்து கொண்டிருக்கிறது.
இப்போது சிவன் மற்றும் சனி பகவானை வழிபடுவது மிகவும் நன்மை பயக்கும்.
சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக விசேஷங்களில் பங்கேற்பதும், அபிஷேக நிகழ்வில் பங்களிப்பதும் நல்லது.