குருவின் வக்ர பயணத்தினால் சிலரது வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்களும் நடைபெறப்போகிறது.
ஜூலை 29 முதல் சிலருடைய வாழ்க்கையை புரட்டிப்போடும் சம்பவங்கள் நிகழப்போகிறது.
எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம். அதிலும் குறிப்பாக 3 ராசியின் வாழ்க்கையில் பெரிய பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆபத்தில் சிக்கும் ராசி
சிம்மம்
சிம்ம ராசிக்கு திருமணம் உள்ளிட்ட தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வேலை செய்யும்இடத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் மன உளைச்சல் உண்டாகும். ஆலய தரிசனமும் ஆன்மீக பயணமும் மன அமைதியை ஏற்படுத்தும்.
துலாம்
உங்களின் பேச்சினால் சில சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் எனவே அவசரப்பட்டு பேசி பிரச்சினையில் சிக்கிக்கொள்ள வேண்டாம். பயணங்களால் வீண் அலைச்சல்கள் வரலாம். உணவு விசயத்தில் கவனம் தேவை. குரு வக்ர காலத்தில் மருத்துவ செலவுகளும் எட்டிப்பார்க்கும் கவனம் தேவை.
மகரம்
புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் என்றாலும் வேலை செய்யும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகும். பண விசயங்களில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து விடுங்கள். ஆலய பணிகளுக்காக செலவு செய்வீர்கள்.