நவகிரகங்களில் தலைவனாக கருதப்படும் சூரியன் 2022 ஜூலை 17 ஆம் தேதி கடக ராசிக்கு சென்றார்.
மகர ராசியில் வக்ர நிலையில் சனி பயணித்து வருகிறார்.
சூரியனும், சனியும் தந்தை மகனாக இருந்தாலும், எதிரி கிரகங்களாக கருதப்படுகின்றன.
சூரியனும் சனியும் எதிர் எதிரே இருப்பதால் ஆகஸ்ட் 17 வரை சமசப்தம யோகம் உருவாகியுள்ளது.
இந்த இரண்டு கிரகங்களினால் உருவான சமசப்தம யோகம் சில ராசிக்காரர்களுக்கு நிறைய நற்பலன்களைத் தரும்.
அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.
மிதுனம்
சமசப்தம யோக காலம் மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் இக்காலத்தில் நல்ல பலனைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த யோக காலம் நல்ல பலனைத் தரும். வருமானம் அதிகரிக்கும். புதிய மூலத்தில் இருந்து பணம் சம்பாதிப்பீர்கள். நிதி நிலைமை வலுவாகும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். தொழில் செய்பவர்களும் நல்ல பலனைப் பெறுவார்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். இதுவரை தடைப்பட்ட வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
மீனம்
வியாபாரத்தில் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். இது எதிர்காலத்தில் நல்ல லாபத்தைக் கொடுக்கும். அதோடு உங்களின் வேலை செய்யும் விதமும் மேம்படும். இதனால் பணியிடத்தில் பாராட்டைப் பெறுவீர்கள். இக்காலத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.