புதன் பெயர்ச்சி! ஆகஸ்ட் 1ம் தேதி 4 ராசிக்கு ராஜயோகம் – எந்த ராசிக்கு பணம் கொட்டப்போகுது?

ஆகஸ்ட்1ல் புதன் பெயர்ச்சி 2022:
ஜோதிடத்தின் படி, புத்தி, பணம், வியாபாரம், செல்வம், பெருமை, திருமண வாழ்க்கை மற்றும் பேச்சின் கடவுளாக கருதப்படும் புதன் கிரகம் தனது ராசியை மாற்றப் போகிறது.

அதன்படி, புதன் கிரகம் தற்போது கடகத்தில் உள்ளது. ஆகஸ்ட் 1, 2022 அன்று சிம்ம ராசியில் நுழைகிறது. புதனின் இந்த ராசி மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்களை தரும்.

எனினும், குறிப்பிட்ட இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 2022 மிக அற்புதமாக அமையும். புதனின் இந்த பெயர்ச்சியால், இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முழுவதும் வெற்றி கிடைக்கும்.

அதிகப்படியான திடீர் பண வரவு இருக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் யார் என்பதை பற்றி காணலாம்.

ரிஷபம்:
புதனின் மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழிலில் நன்மை தரும். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிடைக்கக்கூடும். நண்பர்களின் உதவியால் வருமானம் அதிகரிக்கும்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவேறும். ரிஷப ராசிக்காரர்களுக்கு வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புகள் ஏற்படும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன மகிழ்ச்சியையும் அமைதியையும் உணர்வீர்கள். குடும்பத்தின் பெரியவரிடமிருந்து பணம் பெறலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். தொழிலிக் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும், பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். திடீர் பண உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். அதிகாரிகளின் உதவியால் பணிகள் எளிதாகும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு மூத்தவர்களின் உதவியால் தொழிலில் நன்மைகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் அடையலாம். நீங்கள் முன்னேற பல வாய்ப்பு இப்போது கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.

பணியிடத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமான இருக்கும். வீட்டில் ஆன்மீக நிகழ்வுகள்நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.