மேஷ ராசி அதிபதியான செவ்வாய், அங்கிருந்து ரிஷப ராசிக்கு ஆகஸ்ட் 10ம் தேதி பெயர்ச்சி ஆக உள்ளார்.
வலிமை, ஆற்றல் தரும் அங்காரகனின் மாற்றத்தில் சில ராசியினர் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் சந்திக்க உள்ளனர்.
அக்டோபர் 16ம் தேதி ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சி ஆவார்.
செவ்வாயின் இந்த மாற்றத்தாலும், அவரின் பார்வை பலத்தாலும் சில ராசியினருக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட உள்ளது.
கடகம்
உங்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சி நடப்பது மிகவும் சிறப்பான பலனைத் தரக்கூடியதாக இருக்கும். இதனால் நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரமாக இருந்தாலும், எந்த ஒரு உத்தியோகமாக இருந்தாலும் அதில் நல்ல வளர்ச்சிக்கான புதிய வழிகள் கிடைக்கும். லாபம் பெறக்கூடிய சூழல் இருக்கும்.
வியாபாரத்தில் நல்ல லாபமும், புதிய நுகர்வோரும் கிடைப்பார்கள். முதலீடுகள் செய்ய சிறப்பான காலமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு 10ம் வீடான கர்ம, தொழில் ஸ்தானத்தில் செவ்வாயின் பெயர்ச்சி நடக்க உள்ளது. இதனால் சிம்ம ராசியினர் எந்த ஒரு வேலை அல்லது தொழில் செய்தாலும் அதில் தைரியமாகவும், வேகமாகவும் முடிவுகளை எடுப்பீர்கள்.
எந்த ஒரு கடினமான சூழலையும் சமாளிக்கும் மன நிலையில் இருப்பீர்கள். இதுவரை தடைப்பட்ட வேலைகள், செயல்களை செய்து முடிக்க ஏற்ற காலமாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியும், தேவைகளை சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய காலமாக இருக்கும்.
விருச்சிகம்
செவ்வாயின் பொது பார்வை பலனான 7ம் வீடான விருச்சிக ராசிக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். மனைவி, தொழில் ஸ்தானத்தில் அமரக்கூடிய செவ்வாய், உங்களின் தொழிலில் முன்னேற்ற கடின உழைப்பைக் கொடுக்க உதவும்.
உங்களின் திருமண வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். அரசு சாந்த துறையில் பணிபுரிபவர்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.