புதன்பகவான் ஒருவரின் ஜாதகத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருந்தால் அவர் சிறந்த படைப்பாளியாக திகழ்வார்.
சூரியனுடன் புதன் இணைந்திருந்தால் சிலருக்கு புத ஆதிபத்ய யோகமும் உண்டாகும்.
நன்மைகளை அடைய புதன் பகவான் சரியான இடத்தில் அமர்ந்து இருப்பது அவசியமாகும். சுய ஜாதகத்தில் புதன் பகவானின் நிலை சரியாக அமையாது இருந்தால் நம்முடைய புத்தியும் மந்த நிலை அடைந்துவிடும்.
ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை சிம்ம ராசியில் பயணம் புதன் பகவானால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்ற பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பகவானால் படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு இது சிறந்த நேரமாகும். கடன் வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது.
ரிஷபம்
மனைவிக்கு பொன் நகைகளை வாங்கி பரிசளிப்பீர்கள். இந்த நேரத்தில் புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகமும் கை கூடி வருகிறது. உங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம்
புதன் பகவானால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.வேலை செய்யும் இடத்தில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. தொழில் வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
கடகம்
பண வருமானத்தில் சின்னச் சின்ன தடைகள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உங்களுக்கு வேலையில் பளு கூடும் இதனால் மன அழுத்தப் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதையும் தைரியமாக எதிர்கொண்டால் பிரச்சினைகளை எளிதில் கையாளலாம்.
சிம்மம்
கலைத்துறையில் இருப்பவர்களின் படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். உங்களின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. தவறான நபர்களுடனான தொடர்புகளை துண்டித்து விடுங்கள். தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்த்து விடுவது நல்லது. வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நல்ல செய்தி தேடி வரும்.
துலாம்
தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும். உங்கள் வளர்ச்சி பிறருக்கு பொறாமையை ஏற்படுத்தும் கண் திருஷ்டி பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை.
விருச்சிகம்
புதன்பெயர்ச்சியால் உங்களுக்கு பண முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணி செய்யும் இடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் பாராட்டு கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
தனுசு
தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். பெற்றோர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும். அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள்.
மகரம்
அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் புதன் பகவானால் வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். யாருக்கும் பணம் கடனாகக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.
கும்பம்
புதனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பணப்பிரச்னை நீங்கி பொருளாதார வளம் அதிகரிக்கும். பயணத்தில் எச்சாிக்கை தேவை. கூட்டுத்தொழிலில் கவனமும் நிதானமும் தேவை.
மீனம்
கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்வது அதிக நன்மையை தரும்.