ஜோதிடத்தின் பார்வையில், ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 ஆகஸ்ட் 7ம் தேதியான நேற்று காலை 05:12 மணிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார்.
தற்போது நிகழ்ந்துள்ள பெயர்ச்சியுடன் சேர்த்து ஆகஸ்ட் 31 வரையில் சுக்கிரன் ஐந்து முறை பெயர்ச்சியாகிறார்.
இரண்டாவது முறையாக சிம்ம ராசிக்கு ஆகஸ்ட் 31, 2022 புதன்கிழமை மாலை 04:09 மணிக்கு சுக்கிரன் பெயர்கிறார்.
இதுவரை இல்லாத ஒன்றாக சுக்கிரன் இரண்டு ராசிப் பெயர்ச்சிகள் மற்றும் 3 நட்சத்திரங்களில் பெயர்ச்சி செய்கிறார்.
இந்த ஐந்து பெயர்ச்சிகளால் எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பாக அமையும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். இதனால், உங்களுக்கு வருமானம் பெருமளவில் உயரும். இந்த நேரத்தில் பல வழிகளில் பணம் சம்பாதிப்பதில் வெற்றி கிடைக்கும்.
நீங்கள் வணிகத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை முடிப்பதில் வெற்றி காண்பீர்கள். இந்த ஒப்பந்தத்தின் நன்மை எதிர்காலத்தில் நன்றாக தெரியும். திருமண மகிழ்ச்சி அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கும் இந்த சேர்க்கை சுபமாக இருக்கும். துலாம் ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் இந்த சேர்க்கை உருவாகிறது. இது வேலை மற்றும் அலுவலக பணிகளுக்கான இடமாக கருதப்படுகிறது.
இந்த நேரத்தில் நீங்கள் புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் வேலை பாராட்டப்படும்.
மிதுனம்:
சுக்கிரன் பெயர்ச்சி நல்ல பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. மிதுன ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் நடக்கும். இந்த காலகட்டத்தில் திடீர் பண ஆதாயம் ஏற்படலாம். வியாபாரத்தில் நல்ல ஆர்டர்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
பேச்சுத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் அற்புதமானதாக இருக்கும். உத்தியோகஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும்.