செவ்வாய் பகவான் கோச்சாரப்படி 3,6,11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் நன்மை செய்யக்கூடியதாகும்.
செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடைகிறார்.
இந்த செவ்வாய் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்களை தருகிறது என பார்க்கலாம் அதற்கேற்ப பலன்களையும் பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாய் 2ஆம் வீட்டில் வாக்கு ஸ்தானத்தில் நிற்பதால் கார சாரமாக பேசுவீர்கள். சில நேரங்களில் பேச்சால் நல்லது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. பிரச்னைகள் வரவும் வாய்ப்பிருக்கிறது.
எனவே இடம், பொருள், ஏவலறிந்து பேசுவது நல்லது. பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள்.
ரிஷபம்
உங்கள் ராசிக்குள் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கிறார். உங்கள் உடல் நலனில் உற்சாகம் பிறக்கும். நம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டமாகும். அதிர்ஷ்டம் தேடி வரும். வண்டி வாகனங்களில் பயணிக்கும் போது கவனம் தேவை.
உங்கள் ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் முன்கோபம் அதிகமாகும். செவ்வாய்கிழமைகளில் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
செவ்வாய் பகவான உங்கள் ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால் சொத்துப் பிரச்னையில் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிக கோபம் ஆபத்தில் முடியும் என்பதால் கவனம் தேவை. நிலம், வீட்டு மனை வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. பயணத்தை ஒத்திப்போடுங்கள்.
இந்த காலகட்டத்தில் ரத்த தானம் செய்யுங்கள் மிகப்பெரிய பாதிப்பில் இருந்து விடுபடலாம். கணவன் மனைவி இடையே சில கருத்து மோதல்கள் வந்து செல்லும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.
கடகம்
செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வருமானம் அதிகரிக்கும். கோஷ்டி பூசல்கள் மறையும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும்.
கணவன் மனைவி உறவில் உற்சாகம் பிறக்கும். வெளிநாட்டு தொடர்புகள் லாபத்தை தரும்.
சிம்மம்
தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வதால் உற்சாகமாக காணப்படுவீர்கள் என்றாலும் பணியில் கவனம் தேவை.
செய்யும் வேலையில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும் வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கூடும்.
கன்னி
செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதால் வீட்டில் அமர்ந்துள்ளார். அதிர்ஷ்டகரமான நேரம் இது. அரசு தேர்வு எழுதியுள்ளவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். பணிசெய்யும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
புரமோசனுக்காக தேர்வு எழுதியுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வர வாய்ப்பு உண்டு. விபத்தில் சிக்காமல் தவிர்க்க ரத்த தானம் செய்யுங்கள். கையில் இருந்த பணம் கரையக்கூடும் என்பதால் கவனமாக செலவு செய்யவும்.
துலாம்
செவ்வாய் பகவான் எட்டாம் வீட்டில் அமர்வது அத்தனை சிறப்பானது அல்ல. எனவே அதிக கவனமாக இருக்கவேண்டிய கால கட்டம் இது. உரிய ஆவணங்கள் இல்லாமல் யாருக்கும் பண தர வேண்டாம். பணம் கொடுக்கல்வாங்கல் விஷயத்தில் வங்கிக் காசோலை, டி.டி மூலமாக செய்வது நல்லது.
உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிகாரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும் என்றாலும் அநாவசியப் பேச்சுகளை குறைப்பது நல்லது.
விருச்சிகம்
செவ்வாய் பகவான் 7ம் வீட்டில் நிற்பதால் பணபலம் கூடும். சகோதரங்கள் உறுதுணையாக இருப்பார்கள். களத்திரஸ்தானமான ஏழாம் வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும்.
கோபம், எரிச்சல் தீர முருகனை தரிசனம் செய்யலாம். செவ்வாய்கிழமை, வியாழக்கிழமைகளில் முருகப்பெருமான் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபடவும்.
தனுசு
உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும்.
தன்னம்பிக்கை பெருகும். சகோதரங்களுக்கிடையே அவ்வப்போது சலசலப்புகள், பிரச்னைகள் தலைத்தூக்கினாலும் மற்றொரு பக்கம் மகிழ்ச்சியும், பாசமும் அதிகரிக்கும். ஆறாம் வீட்டில் செவ்வாய் அமர்வது அற்புதமான கால கட்டம். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
மகரம்
செவ்வாய் பகவான் இனி ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பிள்ளைகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். காதல் முயற்சிகள் வெற்றி கிடைக்கும்
பணி செய்யும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி கிடைக்கும் காலம் இதுவாகும். அதிக செலவுகளினால் அவதிகள் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் அதிக எச்சரிக்கை தேவை.
கும்பம்
கணவன் மனைவி இடையே வீண் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். பணி செய்யும் இடத்தில் வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். சில காரியங்கள் தடைப்பட்டு முடிவடையும். முதல் முயற்சியிலேயே எந்த வேலைகளையும் முடிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.
மீனம்
தொட்ட காரியங்கள் துலங்கும். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
எங்கிருந்தாவது வந்து பணம் கொட்டும். பங்குச்சந்தைகள் மூலம் லாபம், மறைமுகமான வருமானம் கிடைக்கும் கால கட்டம் இதுவாகும். வீடு, வாகனம், நிலம் வாங்க ஏற்ற கால கட்டம் என்பதால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும்.