சனி பகவானையே ஆட்டிப்படைக்கும் சிவனின் அருளை எளிதில் பெறக்கூடிய ராசிகள் யார் யார் தெரியுமா?

பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய சிவபெருமான், சில ராசிகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் கருணையும், சிறப்பு அருளையும் பொழிகிறார்.

சிவனின் நல்லருளை இயற்கையாகவே வாழ்நாள் முழுவதும் பெறக்கூடிய ராசிகள் யார், யார் என்பதைப் பார்ப்போம்.

சிவனின் அருளை அதிகம் பெறக்கூடிய ராசிகள்

மேஷம்
செவ்வாய்க் கிரகம் சிவபெருமானின் பாகமாக கருதப்படுகிறது. இவர்களின் அருளால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் சிவபெருமானின் சிறப்பு நல்லருள் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

மேஷ ராசிக்காரர்கள் திங்கட்கிழமையன்று முறைப்படி சிவபெருமானை வழிபட்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் வாழ்வில் ஏற்படும் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

விருச்சிகம்
சிவபெருமானின் சிறப்பு அருளைப் பெறக்கூடியவர்களுள் ஒரு ராசி விருச்சிகம். இந்த ராசியினர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதும், சிவ மந்திரத்தை உச்சரிப்பதும் நல்லது. இதனால் எல்லாவிதமான பயங்களிலிருந்து விடுதலைப் பெற்றிடலாம்.

மகரம்
சனி பகவான் ஆளக்கூடிய ராசி தான் மகர ராசி. உழைப்பு பெயர் எடுத்தவர். எந்த ஒரு கடினமான செயலாக இருந்தாலும் இவர்கள் தங்களின் கடின உழைப்பால் சிறப்பான வேலையை செய்து முடித்துவிடுவர்.

சிவபெருமானின் பெரிய பக்தன் சனீஸ்வரன். எனவே மகர ராசியினர் திங்கள் கிழமைகளில் அபிஷேக, அலங்காரம் செய்து சிவ வழிபாடு செய்யக்கூடிய சனி ஆளக்கூடிய மகர ராசியினருக்கு மிகுந்த நற்பலன்களும், சகலதோஷங்களும் நீங்கும். இவர்கள் முன்னெடுக்கக்கூடிய அனைத்து பணிகளிலும் வெற்றி காணலாம்.

கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். சனி பகவானின் சிறப்பு அருளைப் பெறக்கூடிய இவர்களுக்கு, சிவபெருமானின் நல்லருள் நிரம்ப பெற்றிடக்கூடியவர்கள்.

இந்த ராசியினர் சிவனை வழிபட்டால் எந்த ஒரு கடின சூழ்நிலையில் கூட எளிதில் மகிழ்ச்சியைப் பெற்றிடுவார்கள் என்பது ஐதீகம். கும்ப ராசிக்காரர்கள் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.