வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக புதன் கருதப்படுகிறது.
இந்த புதன் புத்திசாலித்தனம், பகுத்தறிவு திறன் மற்றும் நல்ல தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். தற்போது புதன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.
2022 ஆகஸ்ட் 21 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். புதனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அது நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். இப்போது புதன் கன்னி ராசிக்கு செல்வதால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீண்ட காலமாக ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இக்காலத்தில் அது குணமாகும். வர்த்தகம், பேச்சுவார்த்தை, வங்கியியல் துறையில் உள்ளவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்
இக்காலம் சிறப்பாக இருக்கும். காதலர்களுக்கும் நல்ல காலமாக இருக்கும். குழந்தைகளுடன் நல்ல தரமான நேரத்தை செலவிட்டு, பிணைப்பை வலுப்படுத்துவீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
மிதுனம்
சொத்து அல்லது வாகனம் வாங்க சிறந்த காலம். இக்காலத்தில் தாயின் ஆதரவு கிடைக்கும். அவருடன் நல்ல நேரத்தை அனுபவிப்பீர்கள் மற்றும் உங்களின் பிணைப்பு வலுவாகும். சில புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கடகம்
இக்காலத்தில் கடக ராசிக்காரர்கள் தங்களுடைய உடன்பிறந்தவர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெறுவார்கள். குறுகிய பயணத்திற்கும் வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. எழுத்தாளர், ஊடகவியலாளர், நடிகர், இயக்குநர் அல்லது தொகுப்பாளராக இருப்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் பேச்சு மற்றும் தகவல் தொடர்புத் திறன்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே பேசும் போது மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. நிதித்துறையில் பணிபுரிபவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம். ஏனெனில் நீங்கள் பல புதுமையான யோசனைகளைக் கொண்டு வருவீர்கள்.
கன்னி
தொழில் வாழ்க்கை நன்றாக இருக்கும். விஞ்ஞானிகள், ஏற்றுமதி இறக்குமதியாளர்கள், வங்கியில் பணிபுரிபவர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோருக்கு இது நல்ல காலமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
துலாம்
வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. MNC அல்லது இறக்குமதி-ஏற்றுமதி வணிகத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு அதிர்ஷ்டமான காலம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கும். எனவே செலவழிக்கும் போது கவனமாக இருங்கள்.
விருச்சிகம்
நிதி நிலைமை மேம்படும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். ஆசைகள் நிறைவேறும். மூத்த சகோதரர் மற்றும் தந்தை வழி மாமாவின் ஆதரவால் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். மொத்தத்தில், விருச்சிக ராசிக்காரர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும்.
தனுசு
தொழில் வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சொந்தமாக புதிய முயற்சியைத் தொடங்குவீர்கள். தாயின் ஆதரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான பொன்னான வாய்ப்புகளை நழுவவிடாதீர்கள்.
மகரம்
வெளிநாட்டில் படிக்க விரும்புவோருக்கு, இக்காலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையும், குருவும், வழிகாட்டிகளும் உங்களுக்கு பெரிதும் துணையாக இருப்பார்கள். தொலைதூர பயணத்திற்கு வாய்ப்புள்ளது. வழக்கத்தை விட அதிகமாக ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருப்பீர்கள். இக்காலத்தில் உங்களின் இளைய சகோதர சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம்
உங்களின் மாமனார்-மாமியார் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதற்கு முதலில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பயணம் செய்வதாக இருந்தால், அதிகப்படியான செலவுகளைத் தவிர்த்து சேமிக்க முயற்சி செய்யுங்கள்.
மீனம்
திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் அதிகமாக வரும். திருமணமானவர்களின் வாழ்க்கைத் துணை அவர்களின் வாழ்வில் சிறந்த வாய்ப்புக்களைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அதற்கு ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள் மற்றும் நல்ல வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள்.