புதன் பெயர்ச்சி கிரகமாற்றம்! இந்த 6 ராசிக்கு இனி உண்டாகும் மிகப்பெரிய மாற்றம்;

ஜோதிடத்தின்படி மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக புதன் கிரகம் கருதப்படுகிறது. இவர், 21 ஆகஸ்ட் 2022 அன்று, புதன் கிரகம் அதன் சொந்த ராசியான கன்னிக்குள் நுழையப் போகிறார்.

பின்னர் இந்த புதன் பெயர்ச்சி அக்டோபர் 26ம் தேதி புதன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆவார். கன்னி ராசியின் அதிபதியான புதன், அவரின் சொந்த ராசியில் ஆட்சி உச்சம் பெற்று அமைய உள்ளார்.

எனவே புதனின் இந்த ராசி மாற்றம் 6 ராசிகளுக்கு சுபமாகவும், 6 ராசிகளுக்கு அசுபமாகவும் தரப்போகிறது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 4ஆம் வீட்டில் புதன் பெயர்ச்சி நல்ல பலன் தரும். இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும்.

நிலம், கட்டிடம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வேலை அல்லது வியாபாரத்தில் நல்ல நேரம் அமையும்.

சிம்மம்
சிம்ம ராசியினர்களுக்கு 2ஆம் வீட்டில் புதன் பெயர்ச்சியாவதால் பணப் பிரச்சனைகள் நீங்கும்.

பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். சொத்துக்கள் பெருகும். வேலை அல்லது வியாபாரத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள்.

கன்னி
கன்னி ராசியினர்களுக்கு லக்னத்தில் புதனின் பெயர்ச்சி, உங்கலை புத்திசாலியாகவும் பேச்சாற்றல் மிக்கராகவும் லாபம் பெறுவீர்கள்.

உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் துறையிலும் முன்னேற்றம் அடைவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். விருச்சிகம் விருச்சிக ராசிக்கு 11ஆம் வீட்டில் புதன் பெயர்ச்சியாகிறார்.

இதனால் நிதி நிலை ரீதியாக அதிக பலனளிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும்.

தனுசு
தனுசு ராசியினர்களுக்கு 10ஆம் வீட்டில் புதன் பெயர்ச்சியாகி உத்தியோகம் அல்லது வியாபாரத்தில் சாதகமான பலனை தரும்.

இதனால் வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும். வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.

மகரம்
மகர ராசியினர்களுக்கு 9ஆம் வீட்டில் புதன் பெயர்ச்சி நல்ல பலன் தரும். கல்வி, தொழில், வேலை அல்லது வியாபாரத்தில் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.

பயண யோகங்கள் செய்யப்படுகின்றன. நேரத்தை சரியாகப் பயன்படுத்தினால், வெற்றி பெறுவீர்கள். மதத்தின் மீதான உங்கள் நாட்டம் அதிகரிக்கும்.