ஆகஸ்ட் 21ம் தேதி ஞாயிறு அன்று புதன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
அதன் பின்னர் செப்டம்பர் 10ம் தேதி புதன் தன் சொந்த ராசியிலேயே வக்ர நிலை அடைகிறார்.
அக்டோபர் 26ம் தேதி புதன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆவார். கன்னி ராசியின் அதிபதியான புதன், அவரின் சொந்த ராசியில் ஆட்சி உச்சம் பெற்று அமைய உள்ளார்.
புதன் பகவானின் இந்த சஞ்சாரத்தால் எந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
மேஷ ராசியினர்
இந்த காலங்களில் உங்கள் செயலை விட, அதை செய்வதற்கான யோசனை அதிகம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உங்கள் பணியிட அரசியலிலிருந்து விலகி இருக்கவும். இல்லையெனில் உங்களின் மதிப்பு, மரியாதை பாதிக்கப்படக்கூடும். வயதானவர்கள் சில நோய் அல்லது ஆரோக்கிய குறைப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
பரிகாரம்: வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.
கடக ராசி
புதனின் இந்த பெயர்ச்சி உங்களின் மரியாதை சமூகத்தில் குறையக்கூடும். சொல்வதைச் சுருங்கச் சொல்லவும். அளவாக பேசவும். காதல் தொடர்பான விஷயங்களில் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்.
பரிகாரம்: பசுவிற்கு பசுந்தீவனம் கொடுக்கவும்.
துலாம் ராசி
நிதி நிலை சற்று பலவீனமாக இருக்கும். எந்த ஒரு பணப்பரிவர்த்தனை விஷயங்களிலும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படவும். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த காலகட்டத்தில் கவனமாக செயல்படவும்.
பரிகாரம்: புதன்கிழமை நிலவேம்பு கசாயம் தானம் செய்யுங்கள்.
கும்ப ராசி
நிதி நிலையும் பெரியளவில் சாதகமாக இருக்காது. இந்த காலகட்டத்தில் உங்களின் சேமிப்பு பணம் அதிகம் செலவழிக்க நேரிடும். வாழ்வில் சமநிலை இல்லாததைப் போல உணர்வீர்கள். வேலை தேடுபவர்கள், வேலையில் உள்ளவர்கள் கடினம் உழைக்க வேண்டியிருக்கும்.
பரிகாரம் :
“ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேண அப்ரதிமம் சுபம் ஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம். ”
புதனுக்குரிய இந்த மந்திரத்தை தினமும் 11 முறை உச்சரிக்கவும்.
மீன ராசி
மீன ராசிக்கு புதனின் இந்த சஞ்சாரத்தால், திருமண வாழ்க்கையில் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் சிக்கல்களைச் சமாளிக்க அமைதியாகவும், நிதானமாகவும் செயல்படவும்.






