உங்களுக்கு பிடிச்ச நம்பர் இதுவா? சக்திவாய்ந்த பலம் இருக்குமாம்! 1 முதல் 9 வரை உடனே படிங்க

ஒருவரது குணாதிசயங்கள் நம் ஒவ்வொருவரின் ராசியை ஆளும் கிரகங்களைப் போன்றதோ, அதேப் போல் எண்களுக்கும் அதிபதிகள் உண்டு.

இப்போது உங்களுக்கு பிடித்த நம்பர் உங்களின் குணாதியங்களை சரியாக கூறுகிறதா அல்லது இல்லையா என்பதைக் காண்போம்.

1 முதல் 9 வரை உங்களுக்கு பிடித்த எண்ணின் குணங்கள்

எண் 1
இந்த எண் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ஒரு தலைவரைக் குறிக்கிறது. இந்த எண்ணை மிகவும் பிடித்தவர்களின் எண்ணங்கள் தனித்துவமாக இருக்கும். மேலும் இந்த எண் வலிமை மற்றும் துணிச்சலைக் குறிக்கிறது.

எண் 2
இந்த எண்ணைப் பிடித்தவர்கள் மக்களை ஒன்றிணைத்து அமைதியைக் கொண்டு வருவார்கள். மேலும் இவர்கள் தங்களிடம் உள்ள குறைபாடுகளையும், பலங்களையும் ஏற்றுக் கொள்வார்கள். இதுவே இவர்களின் ஆளுமையை மேம்படுத்துகிறது.

எண் 3
இந்த எண்ணைப் பிடித்தவர்கள் ஆற்றல் மிக்கவர், வெளிப்படையாக பேசுபவர் மற்றும் எதிர்காலத்தை சரியாக கணிக்கக்கூடியவர். மற்றவர்கள் விரைவில் பேசி பழகக்கூடியவர். இந்த எண்ணின் அதிபதி குரு. பொதுவாக மூன்றாம் எண் புனிதமானதாக நம்பப்படுகிறது.

எண் 4
வாழ்க்கையில் நம்பமுடியாத அளவிற்கு உறுதியாக இருப்பார்கள். விடாமுயற்சியினால் வாழ்க்கையில் வெற்றி பெற வலுவான வாய்ப்புள்ளது. இந்த எண்ணின் அதிபதி சூரியன்.

எண் 5
மிகவும் தைரியசாலியாக திகழ்வார்கள் .சிறந்த தலைத்துவ திறன்களைக் கொண்டிருப்பார்கள். மிகவும் அறிவாளி மற்றும் படைப்பு திறன்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர். இந்த எண்ணின் அதிபதி புதன்.

எண் 6
இந்த எண்ணைப் பிடித்தவர்கள் மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள் மற்றும் மற்றவர்களுக்கு தொடர்ந்து உதவ முயற்சிப்பார்கள். மற்றவர்களின் பிரச்சனைகளை எப்போதும் கேட்க தயாராக இருப்பார்கள். இவர்கள் படைப்பாற்றல் மிக்கவர் என்பதால், தங்களின் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

எண் 7
7 ஆம் நம்பர் மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. ஏனெனில் 7 ஆம் எண்ணின் அதிபதி சந்திரன். இந்த எண்ணைப் பிடித்தவர்கள் நம்பமுடியாத அளவிற்கு ஈர்க்கக்கூடியவர் மற்றும் அழகான ஆளுமையைக் கொண்டிருப்பார்கள்.

எண் 8
இவர்கள் மிகவும் நம்பகமானவர் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான கண்ணோட்டத்தைக் கொண்டவர். இந்த எண்ணின் அதிபதி சனி.

எண் 9
இந்த எண்ணைப் பிடித்தவர்களின் முக்கிய நோக்கம் உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். இவர்கள் தலைமைப் பண்புகளைக் கொண்டிருப்பார்கள் மற்றும் புதிய விஷயங்களை செய்ய விரும்புவார்கள். மேலும் இவர்கள் தங்கள் இலக்குகளை அடையும் வரை தொடர்ந்து முயற்சிப்பார்கள்.