சொந்த ராசியில் இருக்கும் சூரியன், புதன், சனி! 3 ராசிக்காரர்களுக்கு அடிக்கபோகும் அதிர்ஷ்டம்

நேற்று முதல் (22-08-2022) புதன் கிரகம் அதன் சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைந்துவிட்டது, பியாக்கு புதன் அக்டோபர் 2-ம் திகதி மீண்டும் கன்னி ராசியிலேயே இயல்பு நிலையில் நேர்கதியில் பயணிக்க உள்ளார்.

அதேபோல் அக்டோபர் 26-ம் திகதி புதன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, கிரகங்களின் ராஜாவான சூரியன், ராசி மாறி சிம்ம ராசியில் நுழைந்தார்.

இது தவிர, நீதியின் கடவுளான சனியும் இந்த நேரத்தில் மகர ராசியில் இருக்கிறார். இப்படியாக 3 முக்கிய கிரகங்கள் சொந்த ராசிகளில் இருப்பது அபூர்வ கிரக நிலையை உருவாக்கி வருகிறது.

எனவே ஜோதிட சாஸ்திரப்படி சூரியன், புதன், சனி ஆகிய கிரகங்கள் தங்கள் சொந்த ராசிகளில் ஒன்றாக இருப்பது சிறப்பு மற்றும் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலனைத் தரும். அவை எந்த ராசிகள் என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

மிதுனம் : மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரக நிலைகள் (புதன்-சூரியன்-சனி) மிகவும் சாதகமாக இருக்கும். சிம்மத்தில் சூரியன் தங்கும் காலத்தில் தொழில், வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

அதேபோல் இந்த ராசிக்காரர்களின் வீரமும் தன்னம்பிக்கையும் அதிகமாகவே இருக்கும். அரசியலில் ஈடுபடுபவர்கள் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். பதவி உயர்வு மற்றும் மரியாதை பெறுவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். இருப்பினும், உடல்நிலத்தில் மோசமான பாதிப்பு ஏற்படலாம்.

கடகம் : கடக ராசிக்காரர்களுக்கு சூரியன், சனி, புதன் ஆகிய கிரகங்களின் நிலை நல்ல சிறப்பான பலனை ஏற்படுத்தி தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் சம்பளம் கூடும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். பதவி உயர்வு பெறலாம். நீதிமன்றத்தில் சிக்கிய வழக்குகள் தீர்வுக்கு வரும். முதலீடு செய்வதற்கும் சேமிப்பதற்கும் இது ஒரு நல்ல நேரம்.

துலாம் : சூரியன், புதன், சனியின் தற்போதைய நிலை துலாம் ராசிக்காரர்களுக்கு சுபயோகமாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள்.

வெளியூர் பயணம் திட்டமிட்டப்படி நிறைவேறும். வெளியூர் சம்பந்தமான வேலை செய்பவர்கள் ஆதாயம் அடைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளின் பெரிய ஒப்பந்தங்கள் முடிவடையும்.