பொதுவாக நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம் வரக்காரணமே நாம் செய்யும் சில தவறுகளாக தான் இருக்க முடியும். உங்களுக்கு ஏற்படக்கூடும் பணகஷ்டம் அனைத்துமே, நீங்கள் முன்பு எப்போதோ செய்த தவறு தான் காரணமாக இருக்கும்.
இதை கொஞ்சம் பொறுமையாக யோசித்தாலே நமக்கு புரிந்துவிடும். அந்த வகையில், பெண்கள் தலை சீவும் போது இந்த தவறுகளை செய்தால் வீட்டில் தரித்திரம் பிடிக்கும்.
பணகஷ்டம் வரும் என பல காரணங்கள் கூறுவார்கள். அதன்படி, தலை சீவும் போது பெண்கள் அதிகமாக காற்று வீசாத இடமாக பார்த்து ஒரு இடத்தில் அமர்ந்து தான் தலையில் இருக்கு சிக்கை எடுக்கவேண்டும்.
உதிரும் முடிகளை உடனடியாக சுத்தம் செய்து விட வேண்டும். வீடு முழுவது அலைந்தால் இப்பிரச்சினை உண்டாகும். பின்னர், முடி காற்றில் அலைய அலைய உங்களுடைய குடும்பமும் அலைய தான் செய்யும்.
உங்களுடைய உடம்பிலிருந்து, உங்களுடைய உயிரிலிருந்து வளரக்கூடிய ஒரு பொருள்தான் இந்த முடி. எனவே, தலையில் இருந்து உதிர்ந்த பிறகு எந்த அளவிற்கு அலைந்து திரிந்து, அடுத்தவர்களின் கால்களின் மிதிபட்டு பாடாயப்படுகிறதோ, அந்த அளவிற்கு உங்களுடைய வாழ்க்கையிலும் கஷ்டம் இருக்கும்.
வீட்டின் சமையல் அறையில் முடி உதிர்ந்து அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தால் அன்னலட்சுமி உங்கள் வீட்டில் ஆரோக்கியமாக தங்க மாட்டாள்.
அதேப்போல் படுக்கையறையில் முடி அலைந்து கொண்டிருந்தால் அந்த இடத்தில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்காது. எனவே, முடிந்த வரை தலையை சீவும் போது முடி உதிர்வை சரியா பராமரித்து, கொள்வதன் மூலமும், உங்களுடைய வீட்டை அசுத்தம் செய்து பராமரிப்பதன் மூலம் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.