வந்த வினையும் வரப்போகும் வினையும் விலகி ஓட விநாயகரை வழிபட வேண்டும்.
கடன் பிரச்சினை தீரவும், ஏழரை சனி, அஷ்டம சனியின் ஆட்டத்திற்கு முடிவுக்கட்டவும் விநாயகரை எந்த நாளில் எப்படி வணங்கலாம் என்றும் பார்க்கலாம்.
திங்கட்கிழமை பரிகாரம்
இன்று போய் நாளை வா என்று அந்த சனிபகவானுக்கே பாடம் எடுத்தவர் கணபதி. விநாயகரை பிரார்த்திப்போரை சனி தசையும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை, விநாயகருக்கு உகந்த நாட்களாகும்.
குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க, விநாயகருக்கு மோதகம் நிவேதனம் செய்ய வேண்டும்.
துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்க வேண்டும். கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை கிடைக்கும். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர் களுக்கு அருள் கொடுப்பவர் ஆனைமுகப் பெருமான்.
காரிய வெற்றி தரும் கணபதி
உங்கள் வீட்டில் பிள்ளையார் சிலை இருந்தால் அந்தப் பிள்ளையாருக்கு, பாலபிஷேகம் செய்து, சந்தனத்தால் அலங்காரம் செய்து, குங்குமப்பொட்டு வைத்து, அருகம்புல் சாத்தி, எருக்கன் பூ கிடைத்தால் அதிலிருந்து, ஒரு ஐந்து எருக்கன் பூக்களை வைத்து, அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
எருக்கன் இலையை விநாயகரின் முன்பாக வைத்து, அதன் மேல், மண் அகல் தீபம், நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றவேண்டும்.
இந்த வழிபாட்டை குடும்பத்தோடு சேர்ந்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்து, நீங்கள் தொடங்கப் போகும் காரியம், எந்தவித தடங்கலும் இல்லாமல் நல்லபடியாக தொடங்கி, தோல்வி இல்லாத வெற்றி அடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாலே போதும்.
3 வாரம் திங்கட்கிழமை இந்த பூஜையை செய்து முடித்துவிட்டு தொடங்கிப் பாருங்கள் வெற்றி நிச்சயம்.
வெற்றிலை மாலை
ஏழரை சனி, அஷ்டமத்து சனி காலத்தில்தான் அதிகமாக ஒருவர் கடன் வாங்குவார்கள். கடன் பிரச்சினையில் சிக்கித் தவிப்பவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கலாம்.
விநாயகரை வேண்டிக் கொண்டு நமக்கு ஏதாவது ஒரு காரியம் நிறைவேற வேண்டுமென்றால், அதற்காக நாம் ஒரு ரூபாய் நாணயத்தை விநாயகர் முன்பு வைத்து வேண்டிக் கொண்டாலே போதும்.
நாம் வேண்டியதை விரைவில் நிறைவேற்றி விடுவார். ஆனால் மனதார பிரார்த்தனை செய்துகொண்டு நியாயமான கோரிக்கையை வைக்க வேண்டும் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை பரிகாரம்
மாலையாக கட்ட முடியாதவர்கள் வெற்றிலையில் உங்களது கடன் தொகையை எழுதி,அந்த வெற்றிலையின் மேல் ஒரு துண்டு வெட்டிவேர், சிறிதளவு நெல்மணி, இரண்டு அருகம்புல், இந்த பொருட்களை வைத்து, இந்த வெற்றிலையை அப்படியே அரச இலையின் மேல் பிடித்து வைத்திருக்கும் மஞ்சள் பிள்ளையாரின் முன்பு வைத்து விடுங்கள்.
இறுதியாக விநாயகருக்கு தீபாராதனை காண்பித்து உங்களுடைய வேண்டுதலை மனதார வைத்து, கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை செய்யலாம்.

அருகம்புல் மாலை கொடுத்த கடன் திரும்ப வருவதற்கு விநாயகர் கோவிலுக்கு புதன்கிழமையில் அருகம்புல்லும், வெல்லமும் வாங்கி கொடுக்க வேண்டும்.
பிள்ளைகள் நன்றாக படிக்கவும் நமக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கவும், செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கவும் புதன்கிழமை அருகம்புல் மாலை சாற்றி விநாயகரை வழிபடலாம்.