ஆண்டின் கடைசி சனி அமாவாசையான இன்று பத்ம மற்றும் சிவ யோகம் உருவாவதால், இந்த சனி அமாவாசை இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த இரண்டு யோகங்களும் சுப யோகங்கள். இந்த சுப யோகங்கள் சனி அமாவாசையில் உருவாகியிருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு சனியின் சிறப்பு அருள் கிடைக்கும்.
அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்நாளில் சனியின் அருள் கிடைக்கும். கடின உழைப்பிற்கான நற்பலன் கிடைக்கும். சனி பகவானின் ஆசீர்வாதத்தால் வருமானம் உயரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள உருவாகும். பணிபுரிபவர்களின் கௌரவம் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியில் ஏற்கனவே சனியின் தாக்கம் உள்ளது. இந்நாளில் ஆன்மீக நடவடிக்கைகளில் நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரகமாக முடிக்கப்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனி அமாவாசை அன்று நல்ல பண வரவு கிடைக்கப் போகிறது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல உறவு கிடைக்கும். வெளியூர் சென்று படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புக்களும், தொழில் தொடங்க விரும்புவோருக்கு சனி பகவானின் அருள் கிடைக்கும். முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியிலும் சனியின் தாக்கம் உள்ளது. ஆனால் இந்த சனி அமாவாசை வாழ்வில் உள்ள பல பிரச்சனைகளை நீக்கும். இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கி, சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் இந்நாளில் நல்ல பலனைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அருளால் வரும் நாட்கள் நன்றாக இருக்கும். கடின உழைப்பிற்கான நல்ல பலனைப் பெறுவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும். பணியில் இருந்த தடைகள் நீங்கும்.